பொது செய்தி

தமிழ்நாடு

உலக பழங்குடியினர் தினம் ஊட்டியில் சிறப்பு நுாலகம்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
ஊட்டி- -ஊட்டியில் பழங்குடியினர் பண்பாடு சார்ந்த நவீன நுாலகம் திறக்கப்பட்டுள்ளது.நீலகிரியில், கோத்தர், தோடர், இருளர், பனியர், காட்டுநாயக்கர், குரும்பர் உள்ளிட்ட பழங்குடியினர் பாரம்பரிய கலாசாரத்துடன் வாழ்ந்து வருகின்றனர். உலக பழங்குடியினர் தினத்தில், மாவட்ட மைய நுாலக வளாகத்தில், பழங்குடியினர் பண்பாடு சார்ந்த நவீன வசதிகளுடன், சிறப்பு நுாலக வசதி

ஊட்டி- -ஊட்டியில் பழங்குடியினர் பண்பாடு சார்ந்த நவீன நுாலகம் திறக்கப்பட்டுள்ளது.நீலகிரியில், கோத்தர், தோடர், இருளர், பனியர், காட்டுநாயக்கர், குரும்பர் உள்ளிட்ட பழங்குடியினர் பாரம்பரிய கலாசாரத்துடன் வாழ்ந்து வருகின்றனர். உலக பழங்குடியினர் தினத்தில், மாவட்ட மைய நுாலக வளாகத்தில், பழங்குடியினர் பண்பாடு சார்ந்த நவீன வசதிகளுடன், சிறப்பு நுாலக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், நீலகிரியில் வாழும் பழங்குடியினரின் வாழ்க்கை முறை குறித்த, 'டிஜிட்டல்' வரைபடங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. பழங்குடியினர் குறித்து, கல்லுாரி மாணவர்கள் படித்து அறியும் வகையில், பல புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.மாவட்ட மைய நுாலகர் ரவி கூறுகையில், ''பழங்குடியினர் வாழ்க்கை முறை குறித்து, ஆராய்ச்சி மாணவர்கள் அறியும் வகையில், நுாலகத்தில் சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்று குறைந்ததும், அனைவரும் அனுமதிக்கப்படுவர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X