பொது செய்தி

தமிழ்நாடு

புலையன் இன மக்களுக்கு பட்டா! மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை

Added : ஆக 09, 2021
Share
Advertisement
உடுமலை:வனப்பகுதியில், வசிக்கும் புலையன் இன மக்களுக்கு, பட்டா வழங்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில், கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.மனுவில் கூறியிருப்பதாவது: ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகத்தில், 15 வன குடியிருப்புகள், உள்ளன. இதில், 8 வன குடியிருப்புகளில், புலையன் இன மக்கள் வசித்து வருகின்றனர்.இந்த இன மக்கள், 1984ம்

உடுமலை:வனப்பகுதியில், வசிக்கும் புலையன் இன மக்களுக்கு, பட்டா வழங்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில், கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.மனுவில் கூறியிருப்பதாவது: ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகத்தில், 15 வன குடியிருப்புகள், உள்ளன. இதில், 8 வன குடியிருப்புகளில், புலையன் இன மக்கள் வசித்து வருகின்றனர்.இந்த இன மக்கள், 1984ம் ஆண்டு வரை, பழங்குடியினர் பட்டியலில் இருந்தனர். தற்போது, தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.கடந்த மூன்றாண்டுக்கு முன், 2006 வன உரிமை சட்டப்படி, மலைப்பகுதியில், வசிக்கும், பழங்குடியின மக்களுக்கு, பட்டா வழங்கப்பட்டது.ஆனால், புலையன் இன மக்களுக்கு, திருப்பூர் மாவட்டத்தில், பட்டா வழங்கப்படவில்லை. கோவை மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.தற்போது, திருப்பூர் மாவட்டத்தில், வன உரிமைகள் வழங்குவதற்கான பணிகள் நடக்கிறது. கோட்ட அளவிலான குழுவில், புலையன் இன மக்களுக்கு, பட்டா வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மாவட்ட அளவிலான கமிட்டிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், 8 வன குடியிருப்புகளில், வசிக்கும் புலையன் இன மக்களுக்கு, பட்டா பின்பு வழங்கலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுவதால், அம்மக்கள் வேதனையில் உள்ளனர்.எனவே, கலெக்டர், தலையிட்டு, பழங்குடியினருக்கு பட்டா வழங்கும் போது, புலையன் இன மக்களுக்கு பட்டா வழங்க ஆவணம் செய்ய வேண்டும்.இந்த இன மக்கள், மூன்று தலைமுறைக்கு மேல், வனப்பகுதி கிராமங்களில், வசித்து வருவதற்கான ஆவணங்கள், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நல அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, மனுவில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X