சில வரி செய்திகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்

Added : ஆக 09, 2021 | கருத்துகள் (1)
Share
தலைமை ஆசிரியை மீது வழக்குஅரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரத்தைச் சேர்ந்தவர் சத்தியபாமா, 55; மாலையமேடு ஊராட்சி துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியை. அரசு தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகம் மூலம், சத்தியபாமாவின் மதிப்பெண் சான்றிதழை ஆய்வு செய்தனர்.இதில் அவர், 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத நிலையில், தேர்ச்சி பெற்றதாக மதிப்பெண் சான்றிதழை திருத்தி, ஆசிரியர் பயிற்சி

தலைமை ஆசிரியை மீது வழக்குஅரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரத்தைச் சேர்ந்தவர் சத்தியபாமா, 55; மாலையமேடு ஊராட்சி துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியை. அரசு தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகம் மூலம், சத்தியபாமாவின் மதிப்பெண் சான்றிதழை ஆய்வு செய்தனர்.இதில் அவர், 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத நிலையில், தேர்ச்சி பெற்றதாக மதிப்பெண் சான்றிதழை திருத்தி, ஆசிரியர் பயிற்சி பெற்று, அரசு பள்ளிகளில் 24 ஆண்டுகள் பணியாற்றியது தெரிந்தது. சத்தியபாமா 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். அவர் மீது பாணாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.கடனை திருப்பி கேட்டவர் கொலைநாமக்கல்: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த துத்திக்குளத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 48. இவர், சிவகுமார், 48, என்பவரிடம் 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். சிவகுமார் தன் நண்பரான முருகேசன், 43, என்பவருடன் சேர்ந்து, நேற்று முன்தினம் இரவு கடனை திரும்ப கேட்க சென்றார்.காளப்பநாயக்கன்பட்டி - கொல்லிமலை சாலையில், எதிரில் வந்த செந்தில்குமாரை நிறுத்தி பணம் கேட்டுள்ளனர். மூவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த செந்தில்குமார், கத்தியால் இருவரையும் குத்தினார். இதில் முருகேசன் இறந்தார். செந்தில்குமாரை சேந்தமங்கலம் போலீசார் கைது செய்தனர். 'டாஸ்மாக்' கடையில் கொள்ளைவிருத்தாசலம்: கடலுார் மாவட்டம், விருத்தாசலம் ஏனாதிமேடு பகுதியில் 'டாஸ்மாக்' கடை செயல்படுகிறது. நேற்று காலை, 10:00 மணிக்கு ஊழியர்கள் கடையை திறக்க வந்தபோது, கடையின் பின்பக்க சுவரில் துளையிடப்பட்டிருந்தது. கடையை திறந்து பார்த்தபோது, 10 அட்டை பெட்டிகளில் இருந்த 65 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, 450 குவார்ட்டர் பாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X