பொது செய்தி

தமிழ்நாடு

நீர்நிலைகளில் கருவேல மரங்கள்: வேரோடு அகற்ற வலியுறுத்தல்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
உடுமலை;கண்மாய்கள், குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் ஆக்கிரமித்து நிற்கும் கருவேல மரங்களை வேரோடு அகற்ற, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி, புறம்போக்கு நிலங்கள், தரிசு நிலங்கள், நீர்நிலைகளில் கருவேல மரங்கள் பரவி காணப்படுகிறது.இவை, நிலத்தடி நீரை முற்றிலும் உறிஞ்சி பெருமளவில் ஆக்சிஜனை உள்வாங்குவதால், மண்வளம் அடியோடு பாதிக்கப்பட்டும்

உடுமலை;கண்மாய்கள், குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் ஆக்கிரமித்து நிற்கும் கருவேல மரங்களை வேரோடு அகற்ற, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி, புறம்போக்கு நிலங்கள், தரிசு நிலங்கள், நீர்நிலைகளில் கருவேல மரங்கள் பரவி காணப்படுகிறது.இவை, நிலத்தடி நீரை முற்றிலும் உறிஞ்சி பெருமளவில் ஆக்சிஜனை உள்வாங்குவதால், மண்வளம் அடியோடு பாதிக்கப்பட்டும் வருகிறது.அக்காலகட்டத்தில், ஊராட்சிகளில், கண்மாய்கள், குளம் உள்ளிட்ட நீர்நிலை கரை மேடுகளில் பயன் தரும் மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல், கண்மாய்களை துார்வாருதல், நீர்வரத்து கால்வாய்களை சீரமைத்தல் உட்பட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது, இப்பணிகள், சரிவர மேற்கொள்ளப்படாத காரணத்தால், கருவேல மரங்கள் வேரூன்றி நன்கு வளர்ந்து விட்டன. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, பாசனம் மற்றும் குடிநீருக்கு பாதிப்பும் ஏற்படுகிறது. எனவே, கருவேல மரங்களை, வேரோடு அகற்றி, நீர்நிலை ஒட்டிய பகுதிகளில் பயனுள்ள மரக்கன்றுகளை நடவு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.விவசாயிகள் கூறுகையில், 'ஐகோர்ட் உத்தரவுப்படி பல மாவட்டங்களில், கருவேல மரங்கள் அகற்றப்பட்டன. அவைகள், வேறோடு அகற்றப்படாத காரணத்தால், மீண்டும் அரசு புறம்போக்கு நிலங்கள், கண்மாய் பகுதிகளில் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X