பொது செய்தி

தமிழ்நாடு

சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் பாதை மாறக்கூடாது! அரசாணையை ரத்து செய்ய ஒருமித்த கருத்து

Added : ஆக 09, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:'பொள்ளாச்சி நகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு செய்து, கிருஷ்ணா குளத்துக்கே வழங்க வேண்டும்; வேறு பகுதிக்கு கொண்டு செல்வதற்கு, கடந்த ஆட்சியில் வெளியான அரசாணையை ரத்து செய்ய வேண்டும்,' என, ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.பொள்ளாச்சி, ஜமீன் ஊத்துக்குளி கிருஷ்ணா குளம் காளிங்கராயன் அணைக்கட்டு பாசன விவசாயிகள் நலச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம்,

பொள்ளாச்சி:'பொள்ளாச்சி நகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு செய்து, கிருஷ்ணா குளத்துக்கே வழங்க வேண்டும்; வேறு பகுதிக்கு கொண்டு செல்வதற்கு, கடந்த ஆட்சியில் வெளியான அரசாணையை ரத்து செய்ய வேண்டும்,' என, ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.பொள்ளாச்சி, ஜமீன் ஊத்துக்குளி கிருஷ்ணா குளம் காளிங்கராயன் அணைக்கட்டு பாசன விவசாயிகள் நலச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம், ராமநாதபுரம் பத்ரகாளியம்மன் கோவில் மண்டபத்தில் நடந்தது.விவசாயிகள் பேசுகையில், 'கிருஷ்ணா குளத்தில் இருந்து வரும் கழிவுநீரை பயன்படுத்தியே, பல ஆண்டுகளாக விவசாயம் செய்கிறோம். இந்நிலையில், பாதாள சாக்கடை திட்டத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்து, தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்ய போவதாக தகவல் கிடைத்தது.இதனால், விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் உள்ளது. எனவே, கடந்த ஆட்சியில் இதற்காக வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும்,' என்றனர்.தி.மு.க., மாநில விவசாய அணி துணை தலைவர் தமிழ்மணி பேசியதாவது:பொள்ளாச்சி நகரில் இருந்து, கிருஷ்ணா குளத்துக்கு வரும் கழிவுநீர், சுத்திகரிப்பு செய்து மாற்றுப்பகுதிக்கு வழங்கினால், இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கும்.கடந்த ஆட்சியில், சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீரை வேறு பகுதிக்கு கொண்டு செல்ல அரசாணை வெளியிட்ட போதே, அதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினேன். தற்போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க., ஆட்சிக்கு வந்துள்ளது.எனவே, முதல்வரின் கவனத்துக்கு இந்த பிரச்னை கொண்டு செல்லப்பட்டு, அந்த அரசாணை ரத்து செய்ய முயற்சி எடுப்பேன்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன் பேசியதாவது:பாதாள சாக்கடை திட்டத்தில் சுத்திகரிப்பு செய்யப்படும் நீரை வேறு பகுதிக்கு கொண்டு செல்லக்கூடாது என அ.தி.மு.க., ஆட்சியில் இருந்த போதே அமைச்சரிடம் வலியுறுத்தினேன்.தேர்தல் முடிந்ததும், இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என அமைச்சர் தெரிவித்தார். தற்போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் இது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.சுத்திகரிப்பு நீர், மாற்றுப்பகுதிக்கு கொண்டு செல்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அமைச்சரை சந்தித்து விளக்க வேண்டும்.விவசாயிகள் குழு அமைத்து, அமைச்சரை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தி ரத்து செய்ய வலியுறுத்தலாம். மேலும், சட்டசபையில் கிருஷ்ணா குளம் நீர், வேறு பகுதிக்கு திருப்புவது குறித்த அரசாணையை ரத்து செய்ய முடியுமா என கேள்வி போட்டுள்ளேன். கேள்வி நேரம் வரும் போது நிச்சயம் பேசுவேன். விவசாயிகள் எடுக்கும் முடிவுகளுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பேன்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.விவசாயிகள் அரணான 'தினமலர்'ஜமீன் ஊத்துக்குளி கிருஷ்ணா குளம் காளிங்கராயன் அணைக்கட்டு பாசன விவசாயிகள் நலச்சங்க ஆலோசனை கூட்டத்தில், 'தினமலர்' நாளிதழில் வெளியான, கிருஷ்ணா குளம் நீர் யாருக்கு சொந்தம் என்ற செய்தி, ஜெராக்ஸ் எடுக்கப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகிக்கப்பட்டது. 'தினமலர்' செய்தியை சுட்டி காட்டி விவசாயிகள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து பேசினர்.மேலும், ஆலோசனை கூட்டத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகள் சார்பில் பங்கேற்று உறுதி அளித்தது விவசாயிகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X