அனுமதியற்ற வணிக கட்டடங்களுக்கு கடிவாளம்: பூட்டி சீல் வைக்கப்படுமென கமிஷனர் எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அனுமதியற்ற வணிக கட்டடங்களுக்கு கடிவாளம்: பூட்டி 'சீல்' வைக்கப்படுமென கமிஷனர் எச்சரிக்கை

Added : ஆக 09, 2021
Share
பொள்ளாச்சி:''பொள்ளாச்சி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கட்டடம் முறையாக அனுமதி பெற்று கட்ட வேண்டும்,'' என நகராட்சி கமிஷனர் தாணுமூர்த்தி தெரிவித்தார்.பொள்ளாச்சி நகரத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களில், 'பார்க்கிங்' வசதியில்லை; வாகனங்கள் ரோட்டிலே நிறுத்தப்படுகின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் தலைவலியாக உருமாறி உள்ளது.இந்நிலையில், குடியிருப்பு

பொள்ளாச்சி:''பொள்ளாச்சி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கட்டடம் முறையாக அனுமதி பெற்று கட்ட வேண்டும்,'' என நகராட்சி கமிஷனர் தாணுமூர்த்தி தெரிவித்தார்.பொள்ளாச்சி நகரத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களில், 'பார்க்கிங்' வசதியில்லை; வாகனங்கள் ரோட்டிலே நிறுத்தப்படுகின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் தலைவலியாக உருமாறி உள்ளது.இந்நிலையில், குடியிருப்பு பகுதிகளிலும் வணிக வளாக கட்டடங்கள் கட்டப்படுகின்றன. குடியிருப்புக்காக அனுமதி பெற்று, வணிக வளாக கட்டடம் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டு வருகின்றன.உரிய அனுமதி இல்லாமல், குடியிருப்பு பகுதிகளில் கட்டடம் கட்டப்படுவது குறித்து புகார்கள் எழுந்துள்ளதுடன், நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.அனுமதியில்லாத, 'பார்க்கிங்' வசதியில்லாத கட்டடங்களை கண்டறிந்து நகராட்சி அதிகாரிகள் 'சீல்' வைக்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.இந்நிலையில், நகரப்பகுதியில் அனுமதியின்றி புதிய கட்டடம் கட்டக்கூடாது என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.நகராட்சி கமிஷனர் தாணுமூர்த்தி அறிக்கை:பொள்ளாச்சி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், கட்டடம் கட்டுபவர்கள், நகராட்சியில் உரிய அனுமதி பெற்ற பின்னரே கட்டுமான பணி துவங்க வேண்டும்.அனுமதி பெற்ற வரைபடத்தின் படியே கட்டப்பட வேண்டும். மேலும், குடியிருப்புக்கு என அனுமதி பெற்று வணிக உபயோக கட்டடங்கள் கட்டுவது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.அனுமதியின்றி வணிக உபயோக கட்டடங்கள் கட்டப்பட்டால், நகராட்சி வாயிலாக உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கட்டப்படும் அந்த வணிக கட்டடங்களை, தமிழ்நாடு ஊரமைப்புச்சட்டம், 1971 பிரிவு, 56 மற்றும், 57ன் படி பூட்டி 'சீல்' வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.எனவே, நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வணிக உபயோக கட்டடங்களை உரிய அனுமதி பெற்று கட்ட வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X