அரசியல் செய்தி

தமிழ்நாடு

அன்னை தமிழ் அர்ச்சனை தி.மு.க.,வின் கபட நாடகம்: அர்ஜூன் சம்பத் பேட்டி

Added : ஆக 10, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
நாகர்கோவில்-''அன்னை தமிழில் அர்ச்சனை என்பது தி.மு.க.வின் கபட நாடகம்'' என ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.குமரி மாவட்டத்தில் ஹிந்துக்களுக்கு சிறுபான்மை பாதுகாப்பு, சலுகைகள் வழங்க கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்த பின் அவர் கூறியதாவது:தமிழில் அர்ச்சனை, தமிழில் குடமுழுக்கு என்பதெல்லாம் எம்.ஜி.ஆர்., ஆட்சி காலத்தில் இருந்து நடைபெற்று
 அன்னை தமிழ் அர்ச்சனை தி.மு.க.,வின் கபட நாடகம்: அர்ஜூன் சம்பத் பேட்டி

நாகர்கோவில்-''அன்னை தமிழில் அர்ச்சனை என்பது தி.மு.க.வின் கபட நாடகம்'' என ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.

குமரி மாவட்டத்தில் ஹிந்துக்களுக்கு சிறுபான்மை பாதுகாப்பு, சலுகைகள் வழங்க கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்த பின் அவர் கூறியதாவது:தமிழில் அர்ச்சனை, தமிழில் குடமுழுக்கு என்பதெல்லாம் எம்.ஜி.ஆர்., ஆட்சி காலத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. தற்போது அன்னை தமிழில் அர்ச்சனை என்பது தி.மு.க.,வின் அரசியல் கபட நாடகம். அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்படுகிறார்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக முதல்வர் ஸ்டாலின், அறநிலையத்துறை சார்ந்த வாக்குறுதிகளையேனும் நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கிறேன். பா.ஜ., மூத்த தலைவரான முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை கட்சியில் ஒதுக்குவதாக கூறப்படுவது தவறான தகவல். பா.ஜ., குடும்ப கட்சி அல்ல. குமரி மாவட்டத்தில் ஹிந்துக்கள் சிறுபான்மையினராக மாறி வருவதால் அதற்கான சலுகைகளையும், பாதுகாப்பையும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
maya - Junnagate,இந்தியா
11-ஆக-202100:01:26 IST Report Abuse
maya எந்த ஆள் பலமும் இல்லாத தனி நபர்தான் இவர். இவர் பேசுவதை பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை
Rate this:
Cancel
K.n. Dhasarathan - chennai,இந்தியா
10-ஆக-202121:45:13 IST Report Abuse
K.n. Dhasarathan தைரியம் இருந்தால் தமிழில் அர்ச்சனை வேண்டாம் என்று சொல்லி பாருங்கள், அதை விட்டு ஏதாவது உளறுவது வழக்கமான உங்கள் உளறல்தான் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே மக்கள் டவுட்டு.
Rate this:
Cancel
10-ஆக-202113:58:41 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் தமிழில் அர்ச்சனை கூடாது என்று சொல்ல நீ யார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X