பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: விவஸ்தை இல்லாத கேள்வி!

Updated : ஆக 10, 2021 | Added : ஆக 10, 2021 | கருத்துகள் (83)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :ஜெ.அப்துல், காஞ்சிபுரத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:மஹாராஷ்டிரா காங்கிரஸ் தலைவராக இருக்கும் நானா படோலே என்பவர், பா.ஜ., கட்சியினரைப் பார்த்து ஒரு அருமையான கேள்வி கேட்டிருக்கிறார்.நியாயமான கேள்வி; அற்புதமான கேள்வி; நேர்மையான கேள்வி!'சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காத
ithu, ungal idam, இது, உங்கள், இடம்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :



ஜெ.அப்துல், காஞ்சிபுரத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

மஹாராஷ்டிரா காங்கிரஸ் தலைவராக இருக்கும் நானா படோலே என்பவர், பா.ஜ., கட்சியினரைப் பார்த்து ஒரு அருமையான கேள்வி கேட்டிருக்கிறார்.

நியாயமான கேள்வி; அற்புதமான கேள்வி; நேர்மையான கேள்வி!'சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காத பா.ஜ., இப்போது மக்களின் சுதந்திரத்தை தட்டிப் பறிக்கிறது. மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட, இளைஞர்கள் முன்வர வேண்டும்' என, அவர் கூறியிருக்கிறார்.

நாடு சுதந்திரம் அடைந்து 74 ஆண்டுகள் ஆகின்றன. விரைவில் 75வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம்.இந்த நானா படோலேவுக்கு 55 வயது இருக்கும். நாடு சுதந்திரம் அடைந்ததற்கு காந்தியும், காங்கிரசும் மட்டும் காரணமல்ல; நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உட்பட பலரும் காரணம் என்பதை உணர வேண்டும்.இப்போது பா.ஜ., என அழைக்கப்படும் முன்னாள் ஜன சங்க கட்சி, சியாமா பிரசாத் முகர்ஜியால் 1951 அக்., 21ம் தேதி தான் துவங்கப்பட்டது.


latest tamil news


ஆரம்பிக்காத பா.ஜ., கட்சியினர் எப்படி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட முடியும்? கொஞ்சம் கூட விவஸ்தை இல்லாத கேள்வியாக இருக்கிறதே!நானா படோலேவை பார்த்து ஒரு கேள்வி கேட்கிறோம்...இன்றைக்கு காங்., தலைமை பொறுப்பில் இருக்கும் இத்தாலியைச் சேர்ந்த சோனியா உட்பட- கட்சி உறுப்பினர்கள் யாராவது சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனரா?வரிசைப்படுத்தி காட்டுங்கள் பார்க்கலாம்.

Advertisement




வாசகர் கருத்து (83)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkates - ngr,இந்தியா
10-ஆக-202119:06:39 IST Report Abuse
venkates சியாமா பிரசாத் முகர்ஜி, குருஜி, வீரசவர்கார், நேதாஜி, அரவிந்தர், யார்?
Rate this:
Cancel
r ravichandran - chennai,இந்தியா
10-ஆக-202118:45:55 IST Report Abuse
r ravichandran காந்தி சுதந்திரம் அடைந்த பின்னர், காங்கிரஸ் கட்சியை கலைததுவிடசொன்னார். அந்த நேரத்தில் நேரடியாகவே நேரு பிரதமர் ஆனார். இத்தனைக்கும் அவரைவிட படேல் காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தார். காந்தியின் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் நேரு அந்த பதவிக்கு வந்தார். காந்தியும் ஒரு அரசில்வாதி தான் என்று அப்போது நிரூபணம் ஆனது. பழைய சரித்திரம் இன்னும் நிறய உள்ளது. இப்போது இந்தியாவில் உள்ள எந்த கட்சி தலைவரும் சுதந்திர போராட்ட வீரர்கள் இல்லை.
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
10-ஆக-202118:45:53 IST Report Abuse
M S RAGHUNATHAN திரு தர்மராஜ் தங்கரத்தினம் அவர்களே:. திமுக 2011 யில் தான் அறிவாலயத்தில் தேசியக் கொடி ஏற்றினார்கள். அதுவும் இரண்டாம் மட்ட தலைவர்கள். கருணாநிதி ஒருமுறை கூட அறிவாலயத்தில் கொடி ஏற்றியது கிடையாது. நீங்கள் கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டீர்கள் போலும். சும்மா RSS வசை பாடுவதை நிறுத்துங்கள். நான் பிஜேபி/RSS அல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X