பூங்காவை அழித்து 'பட்டா'; பட்டியலை மாற்ற 'துட்டா?'

Updated : ஆக 10, 2021 | Added : ஆக 10, 2021
Advertisement
சித்ராவின், வீட்டுக்கு சென்ற மித்ரா, ''ஹாய் அக்கா... என்ன பண்றீங்க?'' என்றதும், ''வா... மித்து. உட்கார்,'' என்றவாறே, சமையலறைக்குள் சென்றாள்.பின் தொடர்ந்து சென்ற மித்ராவிடம், ''அவிநாசியில,வேளாண்மை துறைக்கு சொந்தமாக பி.எஸ்.என்.எல்., ஆபீஸ் பக்கம், 16 சென்ட் நிலம் இருக்கிறதா சொல்றாங்கடி. ஆனா,தனியார் சிலர், சொந்த பயன்பாட்டுக்கு நிலத்தை பயன்படுத்றாங்க. இந்த விவகாரத்துல,
 பூங்காவை அழித்து 'பட்டா'; பட்டியலை மாற்ற 'துட்டா?'

சித்ராவின், வீட்டுக்கு சென்ற மித்ரா, ''ஹாய் அக்கா... என்ன பண்றீங்க?'' என்றதும், ''வா... மித்து. உட்கார்,'' என்றவாறே, சமையலறைக்குள் சென்றாள்.

பின் தொடர்ந்து சென்ற மித்ராவிடம், ''அவிநாசியில,வேளாண்மை துறைக்கு சொந்தமாக பி.எஸ்.என்.எல்., ஆபீஸ் பக்கம், 16 சென்ட் நிலம் இருக்கிறதா சொல்றாங்கடி. ஆனா,தனியார் சிலர், சொந்த பயன்பாட்டுக்கு நிலத்தை பயன்படுத்றாங்க. இந்த விவகாரத்துல, நிலத்தை 'சர்வே' செஞ்சு, 'ரிப்போர்ட்' தரோணும்னு, வேளாண்மை துறை ஆபீசர் கேட்டாரு. ஆனா, 'சைலன்டா' இருக்காங்களாம்,''

''சாக்குபோக்கு சொல்லி, நாள் கடத்தறாங்களாம். கூட்டிச்கழிச்சு பார்த்தா, ஏதோ பிளான் பண்றாங்கன்னு, விவசாயிகளே சந்தேகப்பட ஆரம்பிச்சுட்டாங்க,'' என்றாள் சித்ரா.

அப்போது, சித்ராவின் மொபைல் போன் சிணுங்க, ''யாரு, ஈஸ்வரி அக்காவா, எப்படி இருக்கீங்க...'' என இரண்டு நிமிடம் பேசி விட்டு, இணைப்பை துண்டித்தாள்.


அதிகார போர்...''அதே அவிநாசி, சூளையில அடுக்குமாடி குடியிருப்புக்கு தேர்வான பயனாளிகள் பட்டியல், ரெவின்யூ ஆபீசர் கைக்கு வந்துடுச்சாம். உண்மையான பயனாளிகள் தானான்னு, 'செக்' பண்ண போறாங்க,''

''அது, அ.தி.மு.க., ஆட்சியில, தயார் செஞ்சதால, ஆளுங்கட்சிக்காரங்க,'கவனமா' பட்டி யலைமாத்த முயற்சி பண்றாங்களாம். அதுமட்டுமில்லாம, விண்ணப்பம் கொடுங்க, கண்டிப்பா கிடைக்கும்ன்னு, சொல்றாங்களாம்...'' என்றாள் மித்ரா.

''இவங்க அரசியல் ஆதாயத்துக்கு, அப்பாவிங்க தான் பலிகடா ஆகறாங்க. இதே மாதிரிதான், பல்லடம், இச்சிப்பட்டியில ஓடையை ஒட்டியிருக்கற புறம்போக்கு நிலத்துல, அங்க இருக்கற மக்களே சேர்ந்து, பூங்கா அமைச்சிருக்காங்க. அங்க, இலவச பட்டா கொடுக்க ஆளுங்கட்சிக்காரங்க முயற்சி பண்றாங்களாம்,'' ஆவேசமாக பேசினாள் சித்ரா.

''ஆட்சி மாறியும், காட்சி மாறலைங்கிற கதையால்லா இருக்கு,'' என்ற மித்ரா ''பூண்டியில், ஆளுங்கட்சி நிர்வாகிங்க சில பேரு, பேரூராட்சி நிர்வாகத்துல ரொம்பவே தலையிடறாங்களாம். இது விஷயமா, உள்ளூர் அமைச்சர்கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணவும் மக்கள் தயாராகிட்டாங்க,'' என, மற்றொரு மேட்டரையும் கூறினாள்.

''உள்ளாட்சி தேர்தல் வரபோகுதுல்ல. அப்படிதான் இருக்கும் மித்து. சேதி செல்லும் துறை மினிஸ்டர் பேரை வைச்சிருக்கிறதாலோ, என்னவோ, அவரின் அதிகாரம் கொடிகட்டி பறக்குதாம்,'' என புதிர் போட்ட சித்ரா, காபி டம்ளரை மித்ராவிடம் கொடுத்தாள்.


நம்பிக்கை முக்கியம்!அதனை அருந்தியவாறே மித்ரா, ''நீங்களே... சொல்லிடுங்க...'' என்றாள்.

''பல்லடம் சப்-டிவிஷனில், '...நாயக்கன்...' ஸ்டேஷனில், ஒற்றர்படை போலீஸ்காரர் மட்டும், ஆறு வருஷமா ஒரே இடத்துல இருக்காராம். மினிஸ்டர்பேர் இருக்கறதால, அவரோட ஆதரவு கண்டிப்பா இருக்கும்னு சொல்லு...''

''அக்கா.. நானும் ஒரு ஒற்றர் படை மேட்டர் சொல்றேன். சிட்டிக்குள்ள வர்ற எந்தவொரு தகவலும் தன்னை மீறி, வெளியே போகக்கூடாதுன்னு நினைச்சு, தனக்கு வேண்டப்பட்ட ஒருத்தரை, தனக்கு கீழ் உள்ள பணியிடத்துக்கு நியமிக்க ஏற்பாடு பண்ணிட்டாரு ஒரு ஆபீசர்,''

''அப்படியா? விளக்கமா சொல்லுடி''

''அண்ணாமலையார் குடி கொண்டுள்ள ஊர்ல மாவட்ட ஆபீசரா இருந்தவரு, சிட்டிக்கு வந்திருக்காரு. அவருக்கு விசுவாசமா, இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் இருந்த ஒரு ஆபீசரும், சிட்டிக்கு, டிரான்ஸ்பர் ஆகி வந்தவரை, ஒற்றர் படையில, உட்கார வைச்சுட்டாராம்,

''அப்போது, மித்ராவின் மொபைல்போன் ஒலிக்கவே, ''ஹாய்... அரவிந்த்அங்கிள். அந்த பேங்க் லோன் விஷயம் தானே. அது விஷயமா, செங்குட்டுவன் சார், உங்ககிட்ட பேசறேன்னு சொல்லி யிருக்கார்,'' எனக்கூறி, இணைப்பை துண்டித்து, ''ஆபீசர் கண்டித்தாலும், சிலரு அடங்கவே மாட்டேங்கறாங்க'' என அடுத்த மேட்டருக்கு தாவினாள்.


டிரைவருக்கு 'டார்ச்சர்'''ஏன் இவ்ளோ, கோவம்; யாரு, என்ன பண்ணா?''

''சென்ட்ரல் ஸ்டேஷன் ஆபீசர், நைட் ட்யூட்டி முடிச்சுட்டு, அதிகாலை நேரத்துல, ஜீப்ல வீட்டுக்கு போனப்போ, ஆக்ஸிடண்ட் ஆகிடுச்சு. ஓட்டிட்டு போன, டிரைவருக்கும் காயம். ஜீப்புக்கும் சேதம்.டிரைவர்கள், 'ரெஸ்ட்' இல்லாம் வண்டி ஓட்டறதால தான் இந்த மாதிரிஆகுதுன்னு, ஒரு 'டாக்','' என்றாள் மித்ரா.

''சட்டம் எல்லாத்துக்கும் ஒரே மாதிரி இருக்கறது இல்லையே மித்து. வீரபாண்டியில, கார் ஏக்ஸிடென்ட் ஆச்சு. அதில, வந்தவங்களுக்கு ஆதரவா ஸ்டேஷன் வந்த ஒரு வக்கீல், போலீஸ்காரர்களை ஒருமையில பேசி திட்டினாராம்...''

''அதனால, அவர் மேல 'கேஸ்' போட்டுசும்மா, விட்டுட்டாங்களாம். இதையே 'பப்ளிக்' ஒருத்தர் செஞ்சிருந்தா உள்ளே போட்டிருப்பாங்க...'' ஆதங்கப்பட்டாள் சித்ரா.

''ஆமாங்க்கா. இது விஷயமா, கவுரிசங்கர் அண்ணா கூட சொன்னார்,'' என்ற மித்ராவின் பேச்சை இடைமறித்த சித்ரா,

''டைப்ரைட்டர் சப்தம் அதிகமா கேட்குதாம்,'' என்றாள்.


சேதி சொல்லாமலே...''என்னக்கா, சம்மந்தம் இல்லாம பேசுறீங்க...''

''அட... சொல்றேன் கேளு. சேதி சொல்ற ஆபீசுக்கு புதுசா வந்திருக்கற ஆபீசர், வேலை பார்க்குற எல்லாருக்கும் கட்டாயம் 'டைப்பிங்' தெரிஞ்சிருக்கோணும்னு 'கட் அண்ட் ரைட்'டா சொல்லிட்டாராம். அதனால, சிலரு, 'டைப்ரைட்டிங் சென்டரு'க்கு போய் பழக ஆரம்பிச்சிட்டாங்க...''

''அதெல்லாம் சரிதான். ஆனா, கலெக்டரோட அறிக்கை, திட்டம், செயல்பாடுகளை, சேதி சொல்ற ஆபீஸ் மூலமா தான், மீடியாக்களுக்கு தரணும். ஆனா, அதுக்கு முன்னாடியே சோஷியல் மீடியாவில், பரவ விட்டுடறாங்களாம்''

''இது பத்தி கேட்டப்போ, 'சில துறையினர், கலெக்டர் ஆபீஸ்ல நிகழ்ச்சிய நடத்தி முடிச்சுட்டு, பேஸ்புக், வாட்ஸ்ஆப்ல போட்றாங்களாம். இத னால, அந்த சேதி சொல்ற ஆபீசர் என்ன பண்றதுனு தெரியாம சோர்ந்து போய்ட்டாராம்...''
பணம் பத்தும் செய்யும்

''சம்பந்தப்பட்ட துறை மினிஸ்டர் இருக்கற மாவட்டத்திலயே நிலைமை இப்படி இருந்தா, எப்படி,'' என சலித்து கொண்ட மித்ரா, ''போன வாரம் சிறுபூலுவப்பட்டியில இருக்கற, 'பார்'ல, மது அருந்த வந்தவங்களுக்கும், 'பார்' ஊழியர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டு, பாட்டில் குத்து ஏற்படற அளவுக்கு நிலைமை போயிடுச்சு,'' என்றாள்.''பார்' நடத்தஅனுமதியில்லையே. அப்புறம் எப்படி?''

''பணம் பத்தும் செய்யுங்கற விஷயம் தெரியாதாக்கா. 'பார்'ல பிரச்னை நடந்த மாதிரியே காண்பிக்காம, கமுக்கமா 'கவனிச்சு' முடிச்சிட்டாங்களாம்,''

''பணம் பத்தும் செய்றதோடு, பாதாளம் வரைக்கும் பாயும்...'' சிரித்த சித்ரா, ''இன்னொரு 'பார்' மேட்டர் சொல்றேன் கேளு. யூனியன் மில்ரோட்டில் இருக்கிற ரெண்டு 'டாஸ்மாக்' கடையில், சாயந்திரம் அஞ்சு மணிக்கு மேல, 'சரக்கு' சைடில் விக்கறாங்களாம்,'' என்றாள்.

''அக்கா... அங்க மட்டுமல்ல. நெறையா இடங்கள்ல அப்டித்தான் நடக்குது,''

''அவங்க திருந்த மாட்டாங்கடி...'' என்ற சித்ரா, ''தெற்கு உழவர் சந்தையில் அதிகாரிகள் சொல்லும் விலையும், விற்கும் விலையும் சண்டே அன்னிக்கு மட்டும் மாறிடுது,'' என, கடைசி மேட்டர் சொன்னாள்.''எப்படிங்க்கா சொல்றீங்க...?''

''அட... சண்டேன்னா, மக்கள் அதிகமா வருவர் என்பது தெரிஞ்சே, ஆறு மணிக்கு அப்றம், வெலையை ரெண்டு மடங்கு ஏத்திடறாங்க... வேற வழியில்லீன்னு, மக்களும் வாங்கிட்டு போறாங்க. ஆபீசர்களுக்கு தெரிஞ்சேதான் இது நடக்குது,'' என சித்ரா சொல்லி முடித்ததும்,''ஓ.கே., சித்துக்கா, நான் கெளம்பறேன்...'' எனமித்ரா புறப்பட்டாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X