கடல்சார் பாதுகாப்பு, வர்த்தகத்துக்கு எதிராக உள்ள தடைகளை நீக்க வேண்டும்: பிரதமர் மோடி

Updated : ஆக 10, 2021 | Added : ஆக 10, 2021 | கருத்துகள் (5) | |
Advertisement
நியூயார்க்-''கடல்சார் பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்துக்கு எதிராக உள்ள தடைகளை நீக்க வேண்டும்; அனைத்து பிரச்னைகளுக்கும் அமைதியான முறையில் சுமுக தீர்வு காண வேண்டும்,'' என, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த பொது விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக இந்தியா நியமிக்கப்பட்டுள்ளது. ஆக., மாதத்துக்கு

நியூயார்க்-''கடல்சார் பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்துக்கு எதிராக உள்ள தடைகளை நீக்க வேண்டும்; அனைத்து பிரச்னைகளுக்கும் அமைதியான முறையில் சுமுக தீர்வு காண வேண்டும்,'' என, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த பொது விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.latest tamil newsகடல்சார் பாதுகாப்பை உறுதி செய்ய ஒன்றுபடுவோம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் மோடி பேச்சு

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக இந்தியா நியமிக்கப்பட்டுள்ளது. ஆக., மாதத்துக்கு கவுன்சிலுக்கு தலைமை வகிக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.கவுன்சிலில் கடல்சார் பாதுகாப்பு தொடர்பான பொது விவாதம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமையேற்றார். இந்தியப் பிரதமர் ஒருவர், கவுன்சிலின் கூட்டத்தை தலைமையேற்று உரையாற்றுவது இதுவே முதல் முறை.

இந்தக் கூட்டத்தில் 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது:கடல்சார் பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்தில் அனைத்து நாடுகளும் ஒத்துழைத்து செயல்பட வேண்டும். இதற்காக ஐந்து அம்சங்களை பின்பற்றலாம். இதன் அடிப்படையில் விரிவான வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.கடல்சார் ஒத்துழைப்பில் உள்ள பிரச்னைகள், பயங்கரவாதத்துக்கும், கடற்கொள்ளையர்களுக்கும் உதவுவதாக அமைந்து உள்ளது.


latest tamil news


முதலாவதாக, சட்டப்படியான கடல்சார் வர்த்தகத்துக்கு உள்ள தடைகளை நீக்க வேண்டும். இதன் வாயிலாக உலகளாவிய பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.இரண்டாவது, தற்போது உள்ள கடல்சார் உரிமை தொடர்பான பிரச்னைகளுக்கு சுமுகமான முறையில் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு தீர்வு காணப்பட வேண்டும். பரஸ்பரம் நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பை இது ஏற்படுத்தும். இது சர்வதேச அளவில் இணைந்து செயல்பட வழி வகுக்கும்.மூன்றாவதாக, இயற்கை சீற்றம் மற்றும் கடல் பிராந்தியத்துக்கு உள்ள ஆபத்துகளுக்கு எதிராக அனைத்து நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும்.நான்காவது, கடல்கள் மாசுபடுவதை தடுப்பதில் அனைவரும் பொறுப்பு ஏற்று செயல்பட வேண்டும்.கடைசியாக, கடல்சார் ஆதாரங்களை பயன்படுத்துவதில் அனைவருக்கும் பொறுப்புணர்வு தேவை. சில நாடுகள் மட்டுமே அதிகளவில் மீன் பிடிக்கும் நடைமுறையை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-ஆக-202110:38:59 IST Report Abuse
அப்புசாமி கடல் வர்த்தகம் பண்ணுறேண்ணுட்டு ராட்சத சைஸ் கப்பலகளை இயக்கி, கடலில் கழிவுகளைக் கொட்டி, நாசம் பண்ணுறாங்க. இது பெரியவருக்கு தெரியுமா?
Rate this:
Venkatesan - Chennai,இந்தியா
10-ஆக-202111:45:50 IST Report Abuse
Venkatesanநீங்க அந்த பிரச்சனைக்கு என்ன ...? சும்மா ஏதாவது சொல்லணுமேன்னு சொல்ல கூடாது. எல்லா விதமான போக்குவரத்துக்கும் ஒரு எதிர் வினை உண்டு......
Rate this:
Cancel
Sandru - Chennai,இந்தியா
10-ஆக-202109:32:12 IST Report Abuse
Sandru தலைவா ஏற்கனவே ரீல் அந்து போச்சு .
Rate this:
Cancel
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
10-ஆக-202107:58:13 IST Report Abuse
Easwar Kamal அப்படியே தூக்கி கார்பொரேட் கம்பெனி அதானி குழுமத்துக்கோ அல்லது அம்பானி தூக்கி கொடுத்துவிட்டால் காலத்துக்கும் உங்கள் மாநில கட்சியான பிஜேபி எந்த தடையும் இல்லாமல் ஓடும். இந்தியாவில் உள்ள எந்த மாநிலங்களும் உங்களையோ அல்லது உங்கள் ஊர் கம்பெனிகளை எதிர்து எவனும் வியாபாரம் பண்ண முடியாது. காலத்துக்கும் உங்களுக்கு அடிமைகளவாகவே இருக்க வேண்டும் அதுதான் உங்கள் பிளான்.
Rate this:
Venkatesan - Chennai,இந்தியா
10-ஆக-202111:44:45 IST Report Abuse
Venkatesanஅம்பானி அதானி இதை தவிர உங்களுக்கு எதுவும் தெரியாதா??? வாழை மட்டை அப்டின்னு உங்கள மாதிரி ஆட்களை ஒரு பெரிசு சொல்லிச்சு அது சரியா தான் இருக்கு... வளருங்க... வளரவிடுங்க......
Rate this:
10-ஆக-202113:55:00 IST Report Abuse
ஆரூர் ரங்எப்போ பார்த்தாலும் அம்பானி அதானி?😒 வேறு ஆளில்லையா ? அவங்க திமுக மாதிரி சாராயம் சிகரெட் ஆலையை நடத்தவில்லை. திவால் நிலையில்😒 இருந்த உங்க மாறன் மகன்கள். பாலு கார்பரேட் நடத்தவில்லையா? பாலு கப்பல் கம்பெனி நடத்தவில்லையா ? சாராய ஆலை யெல்லாம் கார்பரேட் தானே? சமூக சேவையா செய்கிறார்கள்,,,?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X