அனுமதியின்றி படப்பிடிப்பு: 30 பேர் மீது வழக்கு

Added : ஆக 10, 2021 | கருத்துகள் (1) | |
Advertisement
ஆனைமலை:ஆனைமலையில், அனுமதியின்றி சினிமா படப்பிடிப்பு நடத்தியதால் இயக்குனர் உட்பட, 30 பேர் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை முக்கோணம் பகுதியில் நேற்று முன்தினம், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டான்' படத்தின் ஷூட்டிங் நடந்தது. இதைக்காண, நுாற்றுக்கணக்கான மக்கள் சமூக விலகலின்றி திரண்டனர்.வால்பாறை டி.எஸ்.பி.,
 அனுமதியின்றி படப்பிடிப்பு: 30 பேர் மீது வழக்கு

ஆனைமலை:ஆனைமலையில், அனுமதியின்றி சினிமா படப்பிடிப்பு நடத்தியதால் இயக்குனர் உட்பட, 30 பேர் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை முக்கோணம் பகுதியில் நேற்று முன்தினம், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டான்' படத்தின் ஷூட்டிங் நடந்தது. இதைக்காண, நுாற்றுக்கணக்கான மக்கள் சமூக விலகலின்றி திரண்டனர்.வால்பாறை டி.எஸ்.பி., சீனிவாசன், ஆனைமலை தாசில்தார் விஜயகுமார் ஆகியோர், படப்பிடிப்பு நடத்த தடை விதித்தனர்.விசாரணையில்,அரசு துறைகளிடம் அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, ஆனைமலை போலீசார் 'டான்' திரைப்பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி உள்பட, 30 பேர் மீது வழக்கு பதிந்தனர். வருவாய்த்துறையினர், 19 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் விதித்து விசாரிக்கின்றனர்.போலீசார் கூறுகையில், 'கொரோனா பரவும் என்பதை தெரிந்தும் கூட்டமாக கூடியது, அனுமதியின்றி கூட்டத்தை சேர்த்தது, ஊரடங்கு காலத்தில் தொற்று பரவும் வகையில் செயல்பட்டது, உள்பட, மூன்று பிரிவுகளின் கீழ், இயக்குனர் சிபி சக்கரவர்த்தி மற்றும் குழுவினர், 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் இன்னும் வழக்கில் சேர்க்கப்படவில்லை. சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடக்கிறது' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-ஆக-202114:30:00 IST Report Abuse
Ram Pollachi பொள்ளாச்சியில் வருடம் முழுவதும் ஏதாவது ஒரு மூலையில் படப்பிடிப்பு நடந்துகிட்டே இருக்கும். பாலியல் படத்தை நினைக்காதே மகனே!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X