கோவிட் மாறுபாடுகள்: கிரேக்க எழுத்துக்கள் போதாது; நட்சத்திர கூட்டங்களின் பெயர் வைக்க பரிசீலனை

Updated : ஆக 10, 2021 | Added : ஆக 10, 2021 | கருத்துகள் (12)
Advertisement
ஜெனிவா: சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கோவிட் வைரஸ், அதன்பின் படிப்படியாக மாறுபாடு அடைந்து தற்போது பல்வேறு வடிவங்களில் மக்களைத் தாக்கி வருகிறது. இந்த மாறுபாடுகளுக்கு கிரேக்க எழுத்துக்களைக் கொண்டு பெயர் சூட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, ஈட்டா, லோட்டா என, பெயர்கள் சூட்டப்பட்டு உள்ளன. கிரேக்க எழுத்து

ஜெனிவா: சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கோவிட் வைரஸ், அதன்பின் படிப்படியாக மாறுபாடு அடைந்து தற்போது பல்வேறு வடிவங்களில் மக்களைத் தாக்கி வருகிறது. இந்த மாறுபாடுகளுக்கு கிரேக்க எழுத்துக்களைக் கொண்டு பெயர் சூட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, ஈட்டா, லோட்டா என, பெயர்கள் சூட்டப்பட்டு உள்ளன.



latest tamil news




கிரேக்க எழுத்து வரிசையில் 24 எழுத்துக்கள் உள்ளன. ஆனால் கோவிட் வைரஸ் தொடர்ந்து மாறுபாடு அடைந்து வருவதால், இந்த எழுத்துக்களுக்குப் பிறகும் பெயர்கள் தேவைப்படும் என, வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் கோவிட் தொழில்நுட்பக்குழு தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறுகையில், 'கோவிட் வைரஸ் தொடர்ந்து மாறுபாடு அடைந்து வருகிறது. அதனால், மாறுபாடுகளை அடையாளப்படுத்த நட்சத்திரக் கூட்டங்களின் பெயர் சூட்ட பரிசீலிக்க உள்ளோம். கிரேக்க கடவுள்கள் அல்லது பெண் தெய்வங்களின் பெயர்களையும் சூட்ட ஆலோசித்து வருகிறோம்' என்றார்.


latest tamil news




கோவிட் வைரசின் டெல்டா மாறுபாடு தற்போது பல்வேறு நாடுகளை உலுக்கி வரும் நிலையில், எண்ணிலடங்கா மாறுபாடுகள் வருவது போல் உலக சுகாதார அமைப்பு தெரிவித்து இருப்பது அச்சத்தை அதிகரித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,சிங்கப்பூர்
10-ஆக-202122:14:00 IST Report Abuse
கதிரழகன், SSLC பெண் தெய்வம் பேரு வெக்க கூடாது. ஆயர் பெராரய்ர் பாதர் ப்ரதர் பாஸ்டர் அது மாதிரி கிருமிக்கு ஒட்டுண்ணி பேரு வெக்கிறதுதான் நாயம்.
Rate this:
Cancel
10-ஆக-202120:48:42 IST Report Abuse
அப்புசாமி தமிழ் எழுத்துக்களை பரிசீலிக்கலாம். 247 தேறும். அதுவும் போறலேன்னா சமஸ்கிருதம், தெலுங்கு , கன்னடான்னு போகலாம். நாலு க, நாலு ப, நாலு ச ந்னு நிறைய தேறும்.
Rate this:
Cancel
Rajamani K - Chennai,இந்தியா
10-ஆக-202120:36:05 IST Report Abuse
Rajamani K இதை 2 மாதம் முன்பே நான் முக நூலில் பதிவிட்டேன். அது உண்மை ஆகிவிட்டது😁😁
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X