அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேலுமணி வீட்டில் சோதனை: அதிமுக கண்டனம்

Updated : ஆக 10, 2021 | Added : ஆக 10, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக, பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கூறியுள்ளது.இது தொடர்பாக பன்னீர்செல்வம், பழனிசாமி கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வேலுமணிக்கு சொந்தமான இடங்களிலும், அவருடன் தொடர்பில் இருப்பவர்கள் ஒரு சிலரின் இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை
ADMK, Raid, ஊழல்மணி_வேலுமணிவேலுமணி, அதிமுக, பழனிசாமி, பன்னீர்செல்வம், சோதனை, திமுக, அதிமுக


சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக, பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கூறியுள்ளது.

இது தொடர்பாக பன்னீர்செல்வம், பழனிசாமி கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வேலுமணிக்கு சொந்தமான இடங்களிலும், அவருடன் தொடர்பில் இருப்பவர்கள் ஒரு சிலரின் இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவதாக வரும் செய்திகள், மக்கள் நலப்பணிகளில் முழு கவனம் செலுத்தாமல், திமுக அரசு அதிமுகவினரை பழிவாங்கும் நடவடிக்கைகளில் அக்கறை காட்டுகிறதோ என்ற சந்தேகமும், வருத்தமும் மனதில் எழுகின்றன.

வேலுமணி வீட்டில் ரெய்டு அதிமுக கண்டனம்

வேலுமணி மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில், திட்டமிட்டு பொய் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்த நிலையில், இன்றைய சோதனைகள் கண்டிக்கத்தக்கவை என கருதுகிறோம்.
கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் மீது சுமத்தப்படும் பொய் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சந்திக்க அதிமுக எப்போதும் தயாராகவே உள்ளது. ஆனால், ஆதாரம் ஏதுமின்றி உண்மை என்ன என்பதை கண்டுபிடிக்கும் முன்னரே ஊழல் பழி சுமத்துவது நியாயமற்றது.


latest tamil news




இத்தகைய சோதனைகள் அனைத்தையும் தாங்கி நின்று அதிமுக மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபடும். அன்பு வழியிலும் அறவழியிலும் அரசியல் தொண்டாற்றும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-ஆக-202123:58:14 IST Report Abuse
அப்புசாமி என்ன ரெய்டோ? வெறும் 13 லட்ச ரூவாய்தான் புடிபட்டதாம். யாரோ பொய்த்தகவல் கூறியிருக்கிறார்கள்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
10-ஆக-202123:15:54 IST Report Abuse
Ramesh Sargam இந்த திமுக நாளை தங்கள் கட்சி அமைச்சர் துறை முருகன் மீது இதுபோல் சோதனை நடத்துவார்களா...??
Rate this:
Cancel
T.sthivinayagam - agartala,இந்தியா
10-ஆக-202121:48:28 IST Report Abuse
T.sthivinayagam மாண்புமிகு முன்னாள் முதல்வர் இனை முதல்வர் அவர்களே நீங்கள் சொன்ன வெற்றி நடை போட்ட முன்னாள் அமைச்சர் இவர் தானா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X