இந்தியாவில் 12 நகரங்கள் கடலுக்குள் மூழ்கும் அபாயம்: நாசா எச்சரிக்கை

Updated : ஆக 10, 2021 | Added : ஆக 10, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
வாஷிங்டன்: இந்தியாவின் கடலோரத்தில் உள்ள 12 நகரங்கள் வரும் 2100ம் ஆண்டுக்குள் கடலுக்குள் மூழ்க உள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.காலநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பநிலை உயர்ந்து வருவதாக சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்புகள் எச்சரித்து வருகின்றன. ஐ.நா., வெளியிட்டுள்ள ஐ.பி.சி.சி., அறிக்கையில், 'சுற்றுச்சூழலுக்கு எதிரான மனித

வாஷிங்டன்: இந்தியாவின் கடலோரத்தில் உள்ள 12 நகரங்கள் வரும் 2100ம் ஆண்டுக்குள் கடலுக்குள் மூழ்க உள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.



latest tamil news



காலநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பநிலை உயர்ந்து வருவதாக சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்புகள் எச்சரித்து வருகின்றன. ஐ.நா., வெளியிட்டுள்ள ஐ.பி.சி.சி., அறிக்கையில், 'சுற்றுச்சூழலுக்கு எதிரான மனித நடவடிக்கைகளால் அடுத்த, 10 ஆண்டுகளுக்குள் புவியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். புவி வெப்பமடைதலால் பனிப்பாறைகள் உடைவது, கடல்நீர் மட்டம் உயர்தல், வெப்ப அலைகள் தாக்கம் அதிகரிப்பு, பஞ்சம் மற்றும் வறட்சி உள்ளிட்டவை ஏற்பட உள்ளது' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.


latest tamil news



ஐபிசிசி அறிக்கையின் அடிப்படையில் கடல் நீர் மட்டம் உயர்வது குறித்த தரவுகளை, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டு உள்ளது. அதில், '2100ம் ஆண்டுக்குள் இந்தியாவின் கடலோரப்பகுதியில் உள்ள 12 கடலோர நகரங்கள் கடலுக்கடியில் 2.7 மீட்டர் அளவு ஆழத்தில் மூழ்கும். குறிப்பாக, சென்னை, விசாகப்பட்டினம், தூத்துக்குடி, மங்களூர், கொச்சின், மும்பை உள்ளிட்ட நகரங்கள் நீருக்குள் மூழ்கும் அபாயத்தில் உள்ளன. மனித நடவடிக்கைகள் சூற்றுச்சூழலில் ஏற்படுத்தியுள்ள மோசமான பாதிப்பே இவற்றிற்கு காரணம்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜ்குமார் - Arakkonam,இந்தியா
11-ஆக-202122:16:58 IST Report Abuse
ராஜ்குமார் இந்த பூமியில் மொத்தம் ஒரு கோடி பேர் தான் இருக்க போறாங்க உலகம் முடியும் நேரம் வந்துவிட்டது மானிடா இந்த அழிவிலிருந்து காக்க சித்தர்களை அழையுங்கள் தர்மம் செய்யுங்கள்
Rate this:
Cancel
Nasrath - Pudugai,இந்தியா
11-ஆக-202122:01:25 IST Report Abuse
Nasrath ஓரங்களில் குறையும் பூமி குர்ஆன் கூற்றை உண்மைபடுத்திய நாசா
Rate this:
R MURALIDHARAN - coimbatore,இந்தியா
14-ஆக-202110:29:25 IST Report Abuse
R MURALIDHARANபாகவதத்தில் கடவுள் கிருஷ்ணர் உலகம் பிரளயம் வந்து அழியும் என்று குறிப்பிட்டுள்ளார்...
Rate this:
Cancel
Nasrath - Pudugai,இந்தியா
11-ஆக-202121:56:09 IST Report Abuse
Nasrath ஓரங்களில் குறைந்து வரும் பூமி என்ற குர்ஆனின் கூற்றை உண்மைப்படுத்திய நாசா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X