2 வெளியாட்கள் தான் காஷ்மீரில் நிலம் வாங்கியுள்ளனர்: மத்திய அரசு

Updated : ஆக 10, 2021 | Added : ஆக 10, 2021 | கருத்துகள் (18)
Advertisement
புது டில்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆன நிலையில், வெறும் 2 வெளியாட்கள் மட்டுமே காஷ்மீரில் நிலம் வாங்கியிருப்பதாக மத்திய அரசு பார்லிமென்டில் கூறியுள்ளது.ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தற்காலிக ஏற்பாடாக சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் சட்டப் பிரிவு 370 மற்றும் 35-ஏ மூலம் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. அதன் மூலம்
காஷ்மீர், நிலம், மத்திய அரசு

புது டில்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆன நிலையில், வெறும் 2 வெளியாட்கள் மட்டுமே காஷ்மீரில் நிலம் வாங்கியிருப்பதாக மத்திய அரசு பார்லிமென்டில் கூறியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தற்காலிக ஏற்பாடாக சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் சட்டப் பிரிவு 370 மற்றும் 35-ஏ மூலம் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. அதன் மூலம் பல்வேறு சலுகைகள் இருந்தன. ராணுவம், வெளியுறவு, தகவல் தொடர்பு துறைகள் தவிர, பிற துறைகள் தொடர்பான மத்திய அரசின் சட்டங்கள், காஷ்மீர் மாநில ஒப்புதலின்றி நிறைவேறினால், அச்சட்டங்கள் இம்மாநிலத்திற்கு பொருந்தாது. மேலும் வெளிமாநிலத்தவர்கள் காஷ்மீரில் நிலம் வாங்க முடியாது. அதே போல் காஷ்மீர் பெண், வெளிமாநில ஆணை திருமணம் செய்தால் அவரும் காஷ்மீரில் நிலம் வாங்க முடியாது.

கடந்த ஆகஸ்ட் 5, 2019-ல் மத்திய அரசு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை அதிரடியாக ரத்து செய்தது. சட்டமன்றத்தை கலைத்துவிட்டு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. அதற்கு இன்னமும் காஷ்மீரில் எதிர்ப்பு நிலவுகின்றது.

இந்நிலையில் “சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு பிறகு எத்தனை பேர் காஷ்மீரில் நிலம் வாங்கியிருக்கிறார்கள். அவர்கள் நிலம் வாங்குவதில் தடைகளை எதிர்கொண்டார்களா” என்று பார்லிமென்டில் கேள்வி எழுப்பப்பட்டது.


latest tamil news




இதற்கு உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வ பதிலில் கூறியதாவது: ஜம்மு - காஷ்மீர் அரசு அளித்த தகவலின் படி, ஆகஸ்ட் 2019 முதல் காஷ்மீருக்கு வெளியில் இருந்து இரண்டு நபர்கள் யூனியன் பிரதேசத்தில் சொத்துக்களை வாங்கியுள்ளனர். காஷ்மீரில் சொத்துக்கள் வாங்குவதில் தடைகளை எதிர்கொண்டதாக எந்தவொரு அறிக்கையும் அரசிடம் பதிவாகவில்லை. என தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Miller - Hamilton,பெர்முடா
11-ஆக-202107:01:40 IST Report Abuse
John Miller அந்த இருவரில் ஒருவர் பெயர் அம்பானி. இன்னொருவர் பெயர் அதானி.
Rate this:
11-ஆக-202107:54:05 IST Report Abuse
ராஜாஏன் மாறன் மற்றும் ஸ்டாலின் குடும்பத்தினர் குடிசையில் தான் வாழ்கிறார்களா?...
Rate this:
Ashok Subramaniam - Chennai,யூ.எஸ்.ஏ
11-ஆக-202108:14:16 IST Report Abuse
Ashok Subramaniamஒண்ணு சோனியா-ராகூல் இன்னொண்ணு -தயா- ஸன் - கார்ப்பரேட்...
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
11-ஆக-202104:13:37 IST Report Abuse
NicoleThomson ஒன்னு ரியல் எஸ்டேட் டான் வாத்ரா மற்றொன்று யாரு?
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-ஆக-202101:19:57 IST Report Abuse
தமிழவேல் ஏரிக்கரை ஓரமாவா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X