சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : ஆக 10, 2021
Share
Advertisement
தடுப்பூசி அவசியம்'டெல்டா' வகை கொரோனா அதிகரித்துள்ளதால் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இதை புறக்கணிப்பவர்கள் மீண்டும் பாதிப்புக்கு உள்ளாவதற்கு இரண்டு மடங்கு வாய்ப்புள்ளது என அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பால் உருவான எதிர்ப்பு சக்தி, அவ்வகை கொரோனா மட்டும் மீண்டும்


தடுப்பூசி அவசியம்



'டெல்டா' வகை கொரோனா அதிகரித்துள்ளதால் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இதை புறக்கணிப்பவர்கள் மீண்டும் பாதிப்புக்கு உள்ளாவதற்கு இரண்டு மடங்கு வாய்ப்புள்ளது என அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பால் உருவான எதிர்ப்பு சக்தி, அவ்வகை கொரோனா மட்டும் மீண்டும் பாதிக்கப்படாமல் தடுக்கிறது. மரபணு மாற்ற வைரஸ்க்கு இது பலனளிக்காது. எனவே கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மிக அவசியம். இது இறப்பு, மருத்துவமனையில் சேரும் நிலையை தடுக்கிறது.


தகவல் சுரங்கம்




பெரிய மியூசியம்



உலகின் மிகப்பெரிய கலை மற்றும் கலாசார மியூசியம் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ளது. இதன் பெயர் ஸ்டேட் ெஹர்மிடேஜ் மியூசியம். இது 1764ல் தொடங்கப்பட்டது. 1852ல் மக்கள் பயன் பாட்டுக்கு திறக்கப்பட்டது. பல்வேறு வகையிலான கலாசார ஓவியங்கள், கலை அம்சங்களில் மொத்தம் 30 லட்சம் பொருட்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன. உலகின் இரண்டாவது பெரிய லுாவ்ரி மியூசியம் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ளது. இது 1793ல் தொடங்கப்பட்டது. இங்கு வரலாற்று சிறப்புமிக்க ஓவியங்கள் பிரிவில் 6.15 லட்சம் பொருட்கள் உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X