புதுடில்லி: உலக சிங்க தினமான இன்று சிங்கங்களின் பாதுகாப்பு முயற்சிகள், அதன் எண்ணிக்கை உயர்வு குறித்து மோடி டுவிட்டரில் பாராட்டு தெரிவித்தார்.

பிரதமர் மோடி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது:"சிங்கம் கம்பீரம் மற்றும் தைரியமானது. ஆசிய சிங்கங்களின் தாயகமாக இந்தியா இருப்பதில் இந்தியா பெருமை கொள்கிறது. இன்று(ஆக.-10) உலக சிங்க தினம், சிங்கங்களை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வுடையோருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். கடந்த சில வருடங்களாக, இந்தியாவில் சிங்கங்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்து வருவது உங்களுக்கு மகிழ்ச்சிசையை அளித்திருக்கும் என்று நம்புகிறேன்." என பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
நான் குஜராத் முதல்வராக பணியாற்றியபோது கிர் சிங்கங்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் அதன் வாழ்விடங்களை விரிவாக்கம் செய்வதற்கான பணி எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாகும். சிங்கங்களின் வாழ்விடங்களை பாதுகாப்பதற்கு உள்ளூர் சமூகங்கள் மற்றும் உலகளாவிய நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. கிர் விலங்குகள் பூங்காவால் சுற்றுலாத்துறையும் வளர்ச்சி அடைந்துள்ளது.

29 சதவீதம் உயர்வு
குஜராத் வனத்துறையின் இவ்வாண்டு ஜூன் மாத அறிவிப்பின்படி, கடந்த 5 வருடங்களில் கிர் தேசியப் பூங்காவில், சிங்கங்களின் எண்ணிக்கை 29 சதவீதம் உயர்ந்துள்ளது. 2015-ல் 523 சிங்கங்கள் இருந்தன. 2020-ல் எடுத்த கணக்கெடுப்பின்படி 674 சிங்கங்கள் இருப்பதை உறுதிசெய்துள்ளனர். இதற்கான கணக்கெடுப்பில் 13 பிரிவுகளைச் சேர்ந்த 1400 வனப் பாதுகாவலர்கள் கலந்து கொண்டனர். கிர் வனப்பகுதி 1412 சதுர கி.மீ. பரப்பளவை கொண்டுள்ளது. தொடர் நடவடிக்கைகள் மூலமாக அந்த இனம் அழிவிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE