தமிழகத்தில் மேலும் 1,893 பேருக்கு கோவிட்: 1,930 பேர் நலம்

Updated : ஆக 10, 2021 | Added : ஆக 10, 2021 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,893 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 27 பேர் உயிரிழந்து உள்ளனர். 1930 பேர் குணமடைந்து உள்ளனர்.இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் மட்டும் 1,50,868 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன.அதில், தமிழகத்தில் 1,893 பேருக்கு கோவிட் உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால்

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,893 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 27 பேர் உயிரிழந்து உள்ளனர். 1930 பேர் குணமடைந்து உள்ளனர்.



latest tamil news




இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் மட்டும் 1,50,868 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன.அதில், தமிழகத்தில் 1,893 பேருக்கு கோவிட் உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,79,130 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 3,90,02,757 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கோவிட் உறுதியானவர்களில் 1,086 பேர் ஆண்கள், 807 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 15,06,494 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 10,72,598 ஆகவும் அதிகரித்து உள்ளது. 1,930 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,24,400 ஆக உயர்ந்துள்ளது.

27 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 5 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 22 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,367 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


மாவட்ட வாரியாக விபரம்



latest tamil news



latest tamil news




Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-ஆக-202120:41:13 IST Report Abuse
சசிக்குமார் சட்டசபை கூடப்போகுதுள்ள எதிர்கட்சிகள் கேள்வி கேட்க கூடாது ஆட்சி மோசம்ன்னு விமர்சனம் வரும்னு குறைத்துகொண்டு உள்ளனர்.
Rate this:
Cancel
10-ஆக-202120:41:12 IST Report Abuse
சசிக்குமார் சட்டசபை கூடப்போகுதுள்ள எதிர்கட்சிகள் கேள்வி கேட்க கூடாது ஆட்சி மோசம்ன்னு விமர்சனம் வரும்னு குறைத்துகொண்டு உள்ளனர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X