சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : ஆக 10, 2021
Share
Advertisement
'இதெல்லாம் முதல்வர் கவனத்திற்கு வந்திருக்காது. அவருக்கு தெரிந்திருந்தால், இரண்டு நாட்கள் சம்பளத்துடன் விடுப்பு அளித்திருப்பார். அந்த அளவுக்கு அவர் ரொம்ப நல்லவராக மாறி வருகிறார்...' என, சொல்லத் துாண்டும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை: போலீசாருக்கு வாரத்திற்கு ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேச்சு, பேட்டி, அறிக்கை

'இதெல்லாம் முதல்வர் கவனத்திற்கு வந்திருக்காது. அவருக்கு தெரிந்திருந்தால், இரண்டு நாட்கள் சம்பளத்துடன் விடுப்பு அளித்திருப்பார். அந்த அளவுக்கு அவர் ரொம்ப நல்லவராக மாறி வருகிறார்...' என, சொல்லத் துாண்டும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை: போலீசாருக்கு வாரத்திற்கு ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த விடுப்புக்கு சம்பளம் கிடையாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இது இரவு, பகலாக பணியாற்றும் போலீசாரை ஏமாற்றும் செயல்.


'இந்த அமைச்சர் சுயநினைவுடன் இல்லையா அல்லது சினிமா எதையும் பார்த்து, அந்த வசனத்தை சொல்கிறாரா என மக்கள் நிச்சயம் அதிர்ச்சி அடைந்திருப்பர்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி பேச்சு:
நான் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன்; உங்களுக்கு பணி செய்ய வந்துள்ளேன்; எனக்கு இந்த பதவியை தந்தது நீங்கள் தான்.


'ஆட்சிக்கு வரும் முன் இருந்த உறுதியின் வேகத்தை இப்போது காண முடியவில்லையே...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பேச்சு:
விவசாயிகள் நலனுக்கு எதிராக மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள இரண்டு சட்டங்களை எதிர்ப்பதில், தமிழக அரசு உறுதியாக உள்ளது.



'அதனால் என்ன... இப்படியொரு நல்ல திட்டத்தை தந்தது, அ.தி.மு.க., தான் என்ற பெருமை உங்களை வந்து சேர்கிறதே...' என, சொல்லத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பேட்டி:
மக்களை தேடி மருத்துவம் என்ற பெயரில் புதிய மருத்துவ திட்டத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கியுள்ளார். இது ஏற்கனவே அ.தி.மு.க., அரசு பின்பற்றிய திட்டம் தான்; புதிதல்ல. ஜெ., துவக்கி வைத்து, பலரும் பாராட்டியது இந்த திட்டம்.


'கொஞ்சம் பொறுங்க. நேரு, இந்திரா, ராஜிவ் பெயரிலான விருதுகள், நினைவு பெயர்களை அகற்றப் போகிறது. அதில் எந்த குழப்பமும் இருக்காது...' என, சொல்லத் துாண்டும் வகையில், தமிழக காங்., ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா அறிக்கை:
விளையாட்டு போட்டிகளில் வாழ்நாள் சாதனையாளருக்கான தியான்சந்த் விருது 2002 முதல் வழங்கப்படுகிறது. 'கேல் ரத்னா' விருதில் முன்னாள் பிரதமர் ராஜிவ் பெயரை நீக்கிவிட்டு, தியான் சந்த் பெயரை பிரதமர் மோடி மாற்றி அறிவித்திருக்கிறார். ஒருவர் பெயரிலே இரண்டு விளையாட்டு விருதுகளா?


'இல்லாததை சொல்லி புகழ வேண்டாம்; பிரதமரின் சாதனைகளை மறைக்காமல் இருந்தால் போதும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், திரிணமுல் காங்கிரசில் இணைந்துள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா அறிக்கை
: வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை, மோடி தான் 1942ல் துவக்கி வைத்து, வெற்றிகரமாக நடத்திக்காட்டினார். அதுபோல, ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் நம் வீரர் தங்கம் பெறவும் அவர் தான் காரணம் என்று புகழவா?

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X