லக்னோ:''மருத்துவமனை சாலை மற்றும் மின்சார வசதிகளுக்காக ஆண்டுக்கணக்கில் மக்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை இதற்கு முன் இருந்தது துரதிர்ஷ்டவசமானது'' என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு முன் பணமின்றி சமையல் எரிவாயு சிலிண்டர் அளிக்கும் பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்ட விழா நேற்று நடந்தது.உத்தர பிரதேசத்தின் மஹோபாவில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பங்கேற்றார்.
பிரதமர் சார்பில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பயனாளிகளுக்கு சிலிண்டர்களை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:நாம் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடவிருக்கும் இந்த வேளையில் 75 ஆண்டுகால வளர்ச்சியை நோக்கினால் நம் சூழலும் நிலைமையும் பல ஆண்டுகளுக்கு முன்பே மாறியிருக்க வேண்டும்.
சாலை மின்சாரம் சமையல் எரிவாயு பள்ளிகள் குடிநீர் வீடு போன்ற அடிப்படை வசதிகளுக்கு மக்கள் பல ஆண்டுகளாக காத்திருக்க வேண்டிய நிலை இதற்கு முன் இருந்தது. இதனால் பெண்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டனர்.
கடந்த 2014க்கு முன்னர் அரசு நலத்திட்டங்களை பெற அரசு அலுவலகங்களில் மக்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. மக்கள் நலத்திட்டங்கள் தடையின்றி அனைவரையும் சென்று சேர வேண்டும் என்பது நம் அரசின் கொள்கையாக உள்ளது. தன்னம்பிக்கை இல்லாமல் தன்னிறைவு பெற்ற நாடாக எப்படி நாம் உருவாக முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.
சபைக்கு வராத எம்.பி.க்கள்பட்டியல் கேட்ட பிரதமர்
தீர்ப்பாய சீர்திருத்த மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது. 'அன்றைய தினம் பா.ஜ. - எம்.பி.க்கள் அனைவரும் தவறாது கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்' என பிரதமர் மோடி உத்தரவிட்டு இருந்தார். அன்றைய சபை நடவடிக்கையில் பங்கேற்காத எம்.பி.க்களின் பட்டியலை அளிக்கும்படி பார்லி. விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு பிரதமர் உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE