சோனியாவுடன் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்சந்திப்பு

Updated : ஆக 10, 2021 | Added : ஆக 10, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி :பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், காங்., தலைவர் சோனியாவை இன்று (ஆக.10) சந்தித்து பேசினார்.பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் தேர்தல் நடக்கவுள்ளதுஇந்நிலையில், டில்லிக்கு இன்று (ஆக.10) வந்த பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், காங்., தலைவர் சோனியாவை அவரது இல்லத்தில் சந்தித்து
 காங்., தலைவர் சோனியா, பஞ்சாப் முதல்வர், சந்திப்பு


புதுடில்லி :பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், காங்., தலைவர் சோனியாவை இன்று (ஆக.10) சந்தித்து பேசினார்.
பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் தேர்தல் நடக்கவுள்ளதுஇந்நிலையில், டில்லிக்கு இன்று (ஆக.10) வந்த பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், காங்., தலைவர் சோனியாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.


latest tamil news



அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க இருந்தாலும், பஞ்சாப் மாநில அமைச்சரவையை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், அது குறித்து சோனியாவுடன் அமரீர்ந்தர் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் காங்., மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் குற்றச்சாட்டுகளுக்கும் அமரீந்தர் விளக்கம் அளித்ததாக தெரிகிறது.

அமரீர்ந்தர் மற்றும் சித்து இடையே உட்கட்சி மோதல் ஏற்பட்டு பஞ்சாப் மாநில காங்., தலைவராக சித்து சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அதன்பின், சோனியாவை அமரீந்தர் சிங் சந்திப்பது இதுவே முதன்முறை.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
17-ஆக-202110:07:26 IST Report Abuse
 Muruga Vel ரெண்டாம் தலை முறையை அறிமுகப்படுத்துவதில் என்ன தவறு ..பைலட்டும் சித்துவும் சிந்தியா மாதிரி சங்கமம் ஆகாம பாத்துக்கணும்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
10-ஆக-202121:58:31 IST Report Abuse
sankaseshan தாங்கள் ஆட்சியி ல் உள்ள மாநிலங்களிலும் வம்பை விலை கொடுத்து வாங்கு கிறது காங்கிரஸ் இன்று பஞ்சாப் உபயம் சி த் து ,நாளை ராஜஸ்தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X