சோனியாவிடமிருந்து காங்.,கை மீட்க ஆலோசனை

Updated : ஆக 12, 2021 | Added : ஆக 10, 2021 | கருத்துகள் (47) | |
Advertisement
புதுடில்லி:காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் பிறந்த நாள் விருந்து நிகழ்ச்சியில், சோனியா குடும்பத்திடம் இருந்து காங்., தலைமையை மீட்டெடுப்பது குறித்து காரசார விவாதம் நடந்துள்ளது.மூத்த வழக்கறிஞரும், காங்.,கைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல், தன் பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடினார்.இதற்காக டில்லியில் உள்ள அவரது இல்லத்தில்
சோனியா,காங்., மீட்க, ஆலோசனை

புதுடில்லி:காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் பிறந்த நாள் விருந்து நிகழ்ச்சியில், சோனியா குடும்பத்திடம் இருந்து காங்., தலைமையை மீட்டெடுப்பது குறித்து காரசார விவாதம் நடந்துள்ளது.

மூத்த வழக்கறிஞரும், காங்.,கைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல், தன் பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடினார்.இதற்காக டில்லியில் உள்ள அவரது இல்லத்தில் மாலை விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்க, காங்., தலைவர்கள் உட்பட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

காங்., தலைவர்கள் சிதம்பரம், சசி தரூர், ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேசிய வாத காங்., தலைவர் சரத் பவார், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத், திரிணமுல் காங்., -8 எம்.பி., டெரிக் ஓ பிரையன், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஒமர் அப்துல்லா உள்ளிட்டோரும் விருந்தில் பங்கேற்றனர்.

அப்போது, 2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசை வீழ்த்த, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. பின், காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் குறித்து தலைவர்கள் சிலர் கேள்வி எழுப்பினர். அப்போது, 'சோனியா குடும்பத்தார் பிடியில் இருந்து காங்., தலைமை விடுவிக்கப்படவில்லை எனில், கட்சியை வலுப்படுத்துவது கடினம்' என, தலைவர்கள் சிலர் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vijay - coimbatore,இந்தியா
18-ஆக-202116:55:57 IST Report Abuse
vijay காங்கிரஸிடம் இருந்து நாட்டை முழுவதுமா மீட்டெடுக்கவேண்டும்
Rate this:
Cancel
P RAMESH KUMAR - balasore,இந்தியா
12-ஆக-202113:42:52 IST Report Abuse
P RAMESH KUMAR ஆனாலும் உங்களுக்கு இம்புட்டு ஆச ஆகாது காங்கிரஸ் குள்ள கொம்புசீவ நினைக்கிற வாய்ப்பில்லை ராசா
Rate this:
Cancel
Sankar Narayanan - Chennai,இந்தியா
11-ஆக-202123:52:16 IST Report Abuse
Sankar Narayanan Only with Rahul Gandhi and Sonia Gandhi the secret code for the swiss bank account is available.So congress leaders will finally ask these persons only to lead the party.Rahul will go to some foreign country at crucial time to operate the account.this is well known secret(?)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X