'மாஜி' அமைச்சர் வேலுமணி வீடுகளில் 'ரெய்டு!'

Updated : ஆக 11, 2021 | Added : ஆக 10, 2021 | கருத்துகள் (31) | |
Advertisement
சுண்ணாம்பு பவுடர், பினாயில் கொள்முதலில் துவங்கி, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் உள்ளிட்ட பணிகளுக்கு, 'டெண்டர்' விட்ட விவகாரத்தில், 810 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள், சகோதரர், மாநகராட்சி அதிகாரிகளின் வீடுகள் என, 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி
 'மாஜி' அமைச்சர் வேலுமணி வீடுகளில்  'ரெய்டு!'

சுண்ணாம்பு பவுடர், பினாயில் கொள்முதலில் துவங்கி, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் உள்ளிட்ட பணிகளுக்கு, 'டெண்டர்' விட்ட விவகாரத்தில், 810 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள், சகோதரர், மாநகராட்சி அதிகாரிகளின் வீடுகள் என, 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

முக்கிய ஆவணங்களை கைப்பற்றி, தேடுதல் வேட்டையை தொடர்கின்றனர்.கோவை, தொண்டா முத்துார் தொகுதிஎம்.எல்.ஏ., வேலுமணி; அ.தி.மு.க., ஆட்சியில், உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தார். 10 ஆண்டுகளில், எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக அமைச்சர் பதவி வகித்தார்.முதல்வர், துணை முதல்வருக்கு அடுத்த நிலையில், 'பவர் புல்' அமைச்சராக இருந்தார்.வேலுமணியின் நட்பு வட்டத்திற்குள் சென்று விட்டால், வளமான பணியிடங்களை பெற்று விடலாம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை, ஐ.பி.எஸ்., உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளிடம் நிலவியது.


ரூ.13 லட்சம், ரூ.2 கோடி ஆவணங்கள் சிக்கியது ........................

அரசியலில் விஸ்வரூபம்தன் இளைய சகோதரர் செந்திலுடன் சேர்ந்து, கோவை மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில், சாலை செப்பனிடுதல் உள்ளிட்ட பணிகளை செய்து வந்த வேலுமணிக்கு, சசிகலாவின் உறவினர் ராவணனின் நட்பு கிடைத்ததும், அரசியலில் விஸ்வரூபம் எடுத்தார்.தற்போது, கொங்கு மண்டலத்தில் வேலுமணி தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின், இ.பி.எஸ்., தலைமையில் நடந்த ஆட்சியே, வேலுமணிக்கு 'பொற்காலம்' என, அ.தி.மு.க.,வினரே தெரிவிக்கின்றனர்.

அதற்கு ஏற்ப, சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, ஸ்டாலின், 'சுண்ணாம்பு பவுடர், பினாயில் கொள்முதல் துவங்கி, ஸ்மார்ட் சிட்டி உட்பட, பல்வேறு திட்டங்களுக்கு டெண்டர் விட்டதில், வேலுமணி கோடிக்கணக்கில் ஊழல் செய்துள்ளார்.'ஆட்சிக்கு வந்ததும், வேலுமணி மீது நடவடிக்கை பாயும்' என்று கூறினார்.இதற்கிடையில், வேலுமணியின் ஊழல் குறித்து, தி.மு.க., அமைப்புச் செயலர் பாரதி மற்றும் அறப்போர் இயக்க நிர்வாகி ஜெயராமன் ஆகியோரும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.லஞ்ச ஒழிப்பு போலீசிலும் புகார் அளித்துஉள்ளனர்.வழக்கு பதிவுபோலீசார் விசாரித்து, வேலுமணி மற்றும் அவரது மூத்த சகோதரர் அன்பரசன், நெருங்கிய கூட்டாளிகள் சந்திரசேகர் மற்றும் சந்திரபிரகாஷ் மற்றும் இவர்கள் நடத்தி வந்த நிறுவனங்கள் மீது, மோசடி, கூட்டு சதி உட்பட, ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர். அதில், வேலுமணி அதிகார துஷ்பிரயோகம் செய்து, தன் சகோதரர் மற்றும் நெருங்கிய கூட்டாளிகள் நடத்தி வந்த நிறுவனங்களுக்கு, சென்னை மாநகராட்சியில் 464 கோடி ரூபாய், கோவை மாநகராட்சியில் 346 கோடி ரூபாய்க்கு டெண்டர் விட்டு, முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதேபோல, குடிநீர் வழங்கல் துறைக்கு பொறுப்பு வகித்த வேலுமணி, அங்கேயும் டெண்டர் விட்டதில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார் என, கூறப்படுகிறது.


அதிரடி சோதனைகோவையில் வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன், சந்திரசேகர் உள்ளிட்டோரின் வீடுகளில், நேற்று காலை 6:00 மணியில் இருந்து, மாலை 7:00 வரை, 500க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில், எம்.ஆர்.சி., நகர், கோடம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, காஞ்சிபுரம், திண்டுக்கல் என, ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளவர்களின் வீடு மற்றும் அலுவலகம் என, 6௦ இடங்களில் சோதனை நடந்தது.

சென்னை மாநகராட்சி முதன்மை பொறியாளராக புகழேந்தி பணிபுரிந்தார். இவர் வேலுமணிக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். ஓய்வுக்கு பின்னரும், இவருக்கு பணி நீடிப்பு வழங்கப்பட்டது. இவர், மேலிடத்து செல்வாக்கு காரணமாக, தன் உறவினர்கள் பெயரில் டெண்டர் எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இவருக்கு பின், தலைமை பொறியாளராக பணிபுரிந்த நந்தகுமாரும், அதே பாணியை கடைப்பிடித்து கோடிக்கணக்கில் சுருட்டியதாக கூறப்பட்டது. இவர்களது வீடுகளிலும், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.


* வேலுமணியிடம் விசாரணைசென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள, எம்.எல்.ஏ., விடுதியில், வேலுமணி அறையில் சோதனையிட, லஞ்ச ஒழிப்பு போலீசார் வந்தனர். அப்போது, வேலுமணியின் ஆதரவாளர்கள், 'எப்.ஐ.ஆர்., உள்ளதா; எம்.எல்.ஏ., விடுதி கவர்னர் கட்டுப்பாட்டில் உள்ளது; அவரிடம் அனுமதி பெற்றுள்ளீர்களா' என, கேள்வி எழுப்பினர். அப்போது வேலுமணி தலையிட்டு, 'சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறேன். நீங்கள் எங்கு வேண்டுமானாலும் சோதனை நடைத்தலாம்' என்று கூறினார். அதன்பின், அவரது அறை முழுவதும் சோதனை நடத்திய போலீசார், வேலுமணியிடம் பல மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.


* ரூ.13 லட்சம் பறிமுதல்இந்த சோதனையில், 13.08 லட்சம் ரூபாய் ரொக்கம், ஆவணங்கள், 2 கோடி ரூபாய்க்கான வங்கி வைப்புத்தொகை ஆவணங்கள், மாநகராட்சி டெண்டர் தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய நபர்களும், நிறுவனங்களும்* வேலுமணி, முன்னாள் அமைச்சர்

* வேலுமணியின் சகோதரர் அன்பரசன்

* வேலுமணியின் பினாமிகள் என கூறப்படும் சந்திரபிரகாஷ், சந்திரசேகர்

* கே.சி.பி., இன்ஜினியர்ஸ் பி., லிமிடெட்

* முருகேசன், எஸ்.பி., பில்டர்ஸ் உரிமையாளர்

* ஜேசு ராபர்ட் ராஜா

* ஏஸ் டெக் மெஷினரி காம்பொனன்ட்ஸ் இந்தியா பி., லிமிடெட்

* கன்ஸ்ட்ரோனிக்ஸ் இன்பரா லிமிடெட்

* கன்ஸ்ட்ரோமல் இன்ப்ரா லிமிடெட்

* ஸ்ரீ மகா கணபதி ஜுவல்லர்ஸ் பி., லிமிடெட்

* ஆலயம் பவுண்டேஷன்ஸ் பி., லிமிடெட்

* வைடூர்யா ஓட்டல் பி., லிமிடெட்

* ரத்னா லட்சுமி ஓட்டல்ஸ் பி., லிமிடெட்

* ஆலம் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் பி., லிமிடெட்

* ஏ.ஆர்.இ.எஸ்.பி., இன்ப்ரா பி., லிமிடெட்

* சி.ஆர்., கன்ஸ்ட்ரக் ஷன் உரிமையாளர் ராஜன் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள்


இத்தனை நிறுவனங்களிலா?கே.சி.பி., இன்ஜினியர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சந்திரபிரகாஷ், ஆலயம் பவுண்டேஷன், கன்ஸ்ட்ரோனிக்ஸ் இன்பரா லிமிடெட், கன்ஸ்ட்ரோமல் கூட்ஸ் பி., லிட், வைடூரியா ஓட்டல்ஸ், ரத்னா லட்சுமி ஓட்டல்ஸ், ஆலம் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளார்.அதேபோல, சந்திரசேகர், கே.சி.பி., இன்ஜினியர்ஸ், ஆலயம் பவுண்டேஷன், கன்ஸ்ட்ரோமல் கூட்ஸ், வைடூரியா ஓட்டல்கள், ரத்னா லட்சுமி ஓட்டல்கள், ஆலம் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளார். இவர், டூ லீப் மீடியா என்ற நிறுவனத்தின் பார்ட்டனராக இருந்து வருகிறார். இவர்கள் கிளை நிறுவனங்களாக, வர்தான் இன்பராஸ்ட்ரக்சர், ஓசூர் பில்டர்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகின்றனர்.


யார் அந்த கறுப்பு ஆடு?வேலுமணி அண்டு கோ வீடு மற்றும் அலுவலங்களில் திடீர் சோதனை நடத்துவது பற்றி, லஞ்ச ஒழிப்பு போலீசார் மிகவும் ரகசியம் காத்து வந்தனர். இதுபற்றிய தகவல்கள் கசிந்து விடக்கூடாது என, போலீசாருக்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.எனினும், வேலுமணியின் விசுவாசமிக்க போலீஸ் அதிகாரிகள் உதவியில், சோதனை நடக்க உள்ள தகவல், நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் சென்றுள்ளது. உஷாரான வேலுமணி, கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டார். 'என் வீடு உட்பட சோதனை நடக்கும் இடங்களில் குறைந்தது, 50 பேரையாவது நிறுத்த வேண்டும். பெண்கள் அதிகம் இருந்தால் நல்லது. அப்படி வரும் நபர்களுக்கு, குடிநீர், டீ, காபி, சாப்பாடு என, எவ்வித குறையும் இருக்கக்கூடாது' எனவும் தெரிவித்துள்ளார்; அதற்கான பொறுப்புகளையும் கட்சி நிர்வாகிகளிடம் ஒப்படைத்து இருந்தார் என, அவருடன் நட்பு வட்டத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.


கே.சி.பி., தார் உற்பத்தி நிலையத்தில் 'ரெய்டு'சென்னை, தாம்பரத்தை அடுத்த திருநீர்மலை, திருமங்கையாழ்வார்புரத்தில், கே.சி.பி., தார் உற்பத்தி நிலையம் இயங்கி வருகிறது. அங்கு, நேற்று காலை 7:00 மணிக்கு, காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் அண்ணாதுரை தலைமையில், எட்டு பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர்.


தார் வினியோகம் செய்வதில் நடந்த முறைகேடுகள் குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தினர். மதியம் 2:45 மணி வரை நீடித்த இந்த சோதனையில், 'அவுட் லோடர்' எனப்படும், தார் வினியோகம் தொடர்பான நான்கு புத்தகங்களை கைப்பற்றி எடுத்து சென்றனர்.


'ஆன்லைன்' ஆதாரம் சிக்கியதுசந்திரசேகர், சந்திரபிரகாஷ் மற்றும் அன்பரசன், ஜேசு ராபர்ட் ராஜா உள்ளிட்டோர், 'ஆன்லைன்' வாயிலாக டெண்டர் எடுக்க, ஒரே கணினி மற்றும் மொபைல் போன்களை பயன்படுத்தி உள்ளனர். இதன், ஐ.பி., முகவரியை போலீசார் சேகரித்துள்ளனர். ஊழல் நடந்து இருப்பதற்கு, இதையும் ஒரு ஆதாரமாக போலீசார் திரட்டி உள்ளனர். - நமது நிருபர் குழு -


பொள்ளாச்சி மளிகை கடையில் சோதனைபொள்ளாச்சி அருகே, வேலு மணி சகோதரரின் நண்பர் வீடு மற்றும் கடையில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை செய்தனர். கோவை மாவட்டம், ஆனைமலை, காளியாபுரத்தில் திருமலைசாமி, 55, என்பவரது மளிகைக் கடை மற்றும் வீட்டில் சோதனை நடந்தது.
வேலுமணி சகோதரர் அன்பரசனின் நெருங்கிய நண்பர் திருமலைசாமி. அவரது வீட்டில், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல் தெரிவிக்க மறுத்தனர்.


பெட்டக சாவி மட்டுமே!வேலுமணி வீட்டில் நேற்று காலை 6:00 மணியளவில் துவங்கிய, லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை, நேற்று மாலை 5:30 மணிக்கு முடிக்கப்பட்டது. அந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்து, துறை அதிகாரிகள் சார்பில் கடிதம் தயாரிக்கப்பட்டு, அதில் வேலுமணியின் மனைவி வித்யாதேவியிடம் ஒப்புதல் பெறப்பட்டது. அந்த கடிதத்தில், வேலுமணியின் வீட்டிலிருந்து பெட்டகச் சாவி மட்டுமே கைப்பற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இதைத் தவிர்த்து, வீட்டில் 'சிமென்ட்' தண்ணீர் தொட்டி, 'பிளாஸ்டிக்' தொட்டி, 'டிஷ் ஆண்டனா'க்கள் போன்ற பொருட்கள் இருப்பதாகவும், எந்தப் பொருளும் சேதப்படுத்தப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.


அன்னுார் நிறுவனத்தில் சிக்கிய ஆவணம்!கோவை மாவட்டம், அன்னுார் அருகே கடத்துாரில், 'தி ஏஸ்டெக் மெஷினரி காம்பொனன்ட்ஸ்' என்ற நிறுவனம், பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், தமிழக அரசுக்கு பல பொருட்களை, 'சப்ளை' செய்துள்ளது. தமிழக அரசின், 'ஆர்டர்'கள் பல ஆண்டுகளாக கிடைத்ததால், முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு தொடர்புடைய நிறுவனம் என்று கருதப்படுகிறது.


நேற்று காலை, 7:00 மணிக்கு, விருதுநகர் லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், பத்மபிரியா, போலீசார் மற்றும் அரசு தரப்பு சாட்சிகள் இருவர் என, 11 பேர் சோதனையில் ஈடுபட்டனர். தொழிற்சாலை அலுவலகத்தில், சில ஆண்டுகளாக பெறப்பட்ட, 'ஆர்டர்'கள், நிறைவேற்றப்பட்ட பணிகள், தொழிற்சாலையின் இயக்குனர்கள், தொழிற்சாலைக்கு மூலப்பொருள் சப்ளையர்கள் என, அனைத்தையும் ஆய்வு செய்தனர்.தொழிற்சாலையை அளவிட்ட அதிகாரிகள், குன்னத்துார் ஊராட்சி தலைவர் கீதா தங்கராஜை, விசாரணைக்கு அழைத்தனர். மாலை, 5:05 மணிக்கு தொழிற்சாலை அலுவலகத்தில் இருந்து, சில ஆவணங்களை எடுத்து சென்றனர்.


பா.ஜ., கண்டனம்!''வேலுமணி வீட்டில் ரெய்டு நடந்து வருவது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை,'' என, தமிழக பா.ஜ., பொதுச்செயலர் கே.டி.ராகவன் கூறினார். அவர் கூறியதாவது:
வேலுமணி வீட்டில் சோதனை, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தெரிகிறது. தி.மு.க., அரசு, வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். வாக்குறுதியை நிறைவேற்றுவர் என மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். இதுநாள் வரை, அதற்கான அறிகுறி தெரியவில்லை. மக்கள் ஏமாற்றத்தில் இருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gurumurthy Kalyanaraman - London,யுனைடெட் கிங்டம்
11-ஆக-202121:14:27 IST Report Abuse
Gurumurthy Kalyanaraman வாழக இப்படிய ரெண்டு பெருங்கட்சிகளும் ஒருவர் செய்த ஊழலை இன்னொருவர் விசாரிப்பது தான் நல்லாட்சிக்கு இலக்கணம். தமிழ் பண்பாடு இதைத்தான் ஊக்குவிக்கிறது. (பி.கு. ஊழலே இல்லாத கட்சியை தமிழன் ஆதரிப்பதோ அல்லது உருவாக்குவதுவோ எந்த நாளோ?
Rate this:
Cancel
Ramamurthy N - Chennai,இந்தியா
11-ஆக-202116:22:03 IST Report Abuse
Ramamurthy N திரு ராகவன் அவர்களே ஊழலுக்கு வக்காலத்து வாங்காதீர்கள். இப்ப தான் தமிழ்நாட்டில் 4 சீட் கிடைச்சிருக்கு. பாஜக ஊழலுக்கு எதிரான கட்சி என்ற மக்களின் நினைப்பில் மண்ணைப் போட்டுவிடாதீர்கள்.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-ஆக-202115:01:39 IST Report Abuse
தமிழவேல் அரசு ஊழியர்கள் தங்களது வேலைகளை செய்ய தடையாக இருந்தவர்களை போராட்டம் செய்தவர்களாகவா சித்தரிப்பது ? அதென்ன ""போராட்டம் நடத்தியவர்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு அளிக்கப்பட்டது"".
Rate this:
VELAN S - Chennai,இந்தியா
11-ஆக-202118:40:17 IST Report Abuse
VELAN Sஅரசாங்கம் இந்த கேசில் ஜெயிக்கும்போது , வேலுமணி யின் கொள்ளு பேரப்பிள்ளை கைதாவார் .. அப்படின்னா இந்த கேஸ் முடிய இன்னமும் 150 ஆண்டு ஆகும் என்று அர்த்தம் . இதையும் இதை படிக்கும் எல்லோரும் சிந்தனை செய்யுங்கள் , எப்படி இந்த சிஸ்டத்தை சரி செய்ய என்று ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X