பாக்., எல்லையில் தலிபான்களின் புகலிடம்: பென்டகன் அறிக்கை

Updated : ஆக 10, 2021 | Added : ஆக 10, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
வாஷிங்டன்: ஆப்கன் - பாகிஸ்தான் எல்லையில் தலிபான்களின் புகலிடமாக விளங்கும் பகுதிகளை மூடும் படி பாகிஸ்தான் தலைமையிடம் அமெரிக்க பாதுகாப்பு செயலர் கூறியதாக பென்டகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நகரங்களில் தலிபான்களின் ஊடுருவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் மத்தியஸ்த பேச்சுக்களின் போது அமைதி வழிக்கு திரும்புவோம்

வாஷிங்டன்: ஆப்கன் - பாகிஸ்தான் எல்லையில் தலிபான்களின் புகலிடமாக விளங்கும் பகுதிகளை மூடும் படி பாகிஸ்தான் தலைமையிடம் அமெரிக்க பாதுகாப்பு செயலர் கூறியதாக பென்டகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.





latest tamil news



ஆப்கானிஸ்தான் நகரங்களில் தலிபான்களின் ஊடுருவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் மத்தியஸ்த பேச்சுக்களின் போது அமைதி வழிக்கு திரும்புவோம் என்று கூறிய தலிபான்கள் அமைப்பினர் இன்று உலக மீடியாக்கள் சாட்சியாக ஆயுத போராட்டங்களை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். பதிலுக்கு ஆப்கன் படைகளும் அமெரிக்க வான் படையினரின் உதவியுடன் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில் அமெரிக்க பாதுகாப்பு செயலர் லாய்ட் ஆஸ்டின் பாகிஸ்தான் ராணுவ தளபதி பாஜ்வாவை அழைத்து தொலைபேசியில் பேசியுள்ளார். இதுப் பற்றி பென்டகன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது: இருவரும் தற்போதைய ஆப்கன் சூழல், பிராந்திய பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை, இரு நாட்டு பாதுகாப்பு உறவுமுறை குறித்து விரிவாக விவாதித்தனர். பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை தொடர்பான பரஸ்பர இலக்குகள் பற்றி ஆஸ்டின் பேசினார். அமெரிக்க-பாகிஸ்தான் உறவை மேம்படுத்துவதில் ஆஸ்டின் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.




latest tamil news



ஆப்கன் - பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் தலிபான்களின் புகலிடங்களை மூடுவது பற்றி அமெரிக்கா தொடர்ந்து பேசி வருகிறது. பாகிஸ்தான் தலைவர்களுடன் அது பற்றி பேச எந்த தயக்கமும் இல்லை. பாகிஸ்தான் மக்களும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே அவர்களின் புகலிடங்களை மூடுவதன் முக்கியத்துவம் பற்றி பேசினோம். ஆப்கனின் தற்போதைய நிலைமைக்கு எல்லையில் தலிபான்கள் இயங்குவது தான் காரணம். என கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
11-ஆக-202104:18:03 IST Report Abuse
NicoleThomson ஆமா அப்படியே மூடிட்டாலும் ? இங்கிருக்கும் குறுகிய மனப்பான்மை கொண்ட அரசியல் சார்ந்த sha நவாஸ் க்கள் பாகிஸ்தான் திரும்பிட போறானுங்க?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X