ஆப்கன் சீரமைப்பில் பங்களிப்பு இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு| Dinamalar

ஆப்கன் சீரமைப்பில் பங்களிப்பு இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு

Added : ஆக 11, 2021
Share
வாஷிங்டன்:'தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் சிறந்த நிர்வாகம் ஏற்படுவதற்கு பயிற்சி மற்றும் கட்டமைப்பு வசதிகள் அளித்து இந்தியா மிகப் பெரிய அளவில் பங்களித்துள்ளது' என, அமெரிக்கா பாராட்டியுள்ளது.ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் விலக்கி கொள்ளப்படுகின்றன. அதைத் தொடர்ந்து தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதற்கு அமெரிக்கா,

வாஷிங்டன்:'தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் சிறந்த நிர்வாகம் ஏற்படுவதற்கு பயிற்சி மற்றும் கட்டமைப்பு வசதிகள் அளித்து இந்தியா மிகப் பெரிய அளவில் பங்களித்துள்ளது' என, அமெரிக்கா பாராட்டியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் விலக்கி கொள்ளப்படுகின்றன. அதைத் தொடர்ந்து தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதற்கு அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.இந்நிலையில் அமெரிக்க ராணுவ அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி நிருபர்களிடம் கூறியதாவது:

ஆப்கானிஸ்தானில் உள்ள நிலவரம் குறித்து ராணுவ அமைச்சர் லாயிட் ஆஸ்டின் தொடர்ந்து தன் கவலையை தெரிவித்து வருகிறார்.அங்குள்ள நிலவரம் சரியான பாதையில் செல்ல வில்லை என்பதே அமெரிக்காவின் அச்சம்.அமைதி மற்றும் சிறந்த நிர்வாகம் ஏற்பட வேண்டும் என்பதே ஆப்கானிஸ்தான் குறித்து இந்தியா மற்றும் அமெரிக்காவின் விருப்பம்.

இதற்காக ஆப்கானிஸ்தானில் பல சிறந்த பணிகளை இந்தியா ஏற்கனவே மேற்கொண்டு உள்ளது. பயிற்சி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 22 ஆயிரம் கோடி ரூபாயை இந்தியா செலவிட்டுள்ளது.மக்கள் விரும்பும் வகையில் ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் அரசியல் ஸ்திரதன்மை ஏற்பட இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.


பாக்.,குக்கு எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவுவது தொடர்பாக பாக்., ராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா உடன் தொலைபேசியில் அமெரிக்க ராணுவ அமைச்சர் லாயிட் ஆஸ்டின் பேசினார்.தலிபான் பயங்கரவாதிகளுக்கு புகலிடமாக பாக்., - ஆப்கானிஸ்தான் எல்லை உள்ளது.இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆஸ்டின் வலியுறுத்தியுள்ளார். அந்த அமைப்புக்கு கிடைத்து வரும் அனைத்து உதவிகளையும் தடுத்து நிறுத்தும்படி அவர் வலியுறுத்தியுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X