ff புதுடில்லி: ஜி.எஸ்.எல்.வி. எப்-10' ராக்கெட் பூமி கண்காணிப்பு செயற்கைகோளை சுமந்தப்படி நாளை (ஆக.12) விண்ணில் பாய்கிறது என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.
“இயற்கை பேரழிவுகள், விவசாயம், வனவியல், கனிமவியல், பேரிடர் எச்சரிக்கை, ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காக 'ஈஓஎஸ்-03' (EOS-3) என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.
2,268 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள் 'ஜி.எஸ்.எல்.வி. எப்-10' ராக்கெட்டில் பொருத்தப்பட்டு நாளை (ஆக. 12) அதிகாலை 5.43 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதையடுத்து விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட் டவுன் துவங்கியது.
.
கொரோனா பரவல் காரணமாக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் திட்டமிட்டபடி ராக்கெட்டுகளை இஸ்ரோவால் விண்ணில் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், நாளை (ஆக.12) திட்டமிட்டபடி விண்ணில் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE