இது உங்கள் இடம்: போலி விவசாயிகளை களையெடுங்கள்!

Added : ஆக 11, 2021 | கருத்துகள் (29) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :எல்.மூர்த்தி, ஊட்டி, நீலகிரி மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: கருணாநிதி முதல்வராக இருந்த போது, விவசாயிகளின் பயிர் கடனை ரத்து செய்தார். மீண்டும் பயிர் கடன் வழங்கி விவசாயிகளை உற்சாகப்படுத்தினார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, இ.பி.எஸ்., ஆகியோர் முதல்வராக இருந்த போதும் விவசாயிகளுக்கு பயிர் கடன்
போலி விவசாயி, களையெடுங்கள்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :


எல்.மூர்த்தி, ஊட்டி, நீலகிரி மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: கருணாநிதி முதல்வராக இருந்த போது, விவசாயிகளின் பயிர் கடனை ரத்து செய்தார். மீண்டும் பயிர் கடன் வழங்கி விவசாயிகளை உற்சாகப்படுத்தினார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, இ.பி.எஸ்., ஆகியோர் முதல்வராக இருந்த போதும் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்பட்டு வந்தன.

இ.பி.எஸ்., தலைமையிலான அ.தி.மு.க., அரசு, சட்டசபை தேர்தலை கருதி விவசாயிகளின் பயிர் கடன் 12 ஆயிரம் கோடி ரூபாய் ரத்து செய்யப்படும் என அறிவித்தது. ஆனால் சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்று, ஸ்டாலின் முதல்வராக ஆட்சி கட்டிலில் அமர்ந்து விட்டார். தி.மு.க., தேர்தல் அறிக்கையில் விவசாயிகளின் பயிர் கடன், கூட்டுறவு வங்கியில் வாங்கிய நகைக்கடன், கல்விக்கடன் ஆகியவை ரத்து செய்யப்படும் எனக்கூறப்பட்டிருந்தது.

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக, அவை இன்னும் செயல் வடிவத்திற்கு வரவில்லை. நிலைமை இப்படி இருக்க, தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் சிலர், 'விவசாயி' என்ற போர்வையில் போலி ஆவணங்கள் மூலம் பயிர்கடன் வாங்கி அரசை ஏமாற்றி மோசடி செய்து வருகின்றனர். அடுத்து வரும் ஆட்சியில், பயிர் கடன் நிச்சயம் ரத்தாகும் என்ற தெளிவான சிந்தனையோடு இருக்கின்றனர்.


latest tamil news


பருவ மழை பொய்த்த போதும், இயற்கை சீற்றங்களால் பயிருக்கு சேதம் ஏற்படும் போதும், விவசாயிகள் நலன் பாதிக்காத வகையில் கூட்டுறவு வங்கிகளில் அவர்கள் வாங்கிய பயிர் கடன்களை, அரசு தள்ளுபடி செய்வதில் தவறில்லை. அரசு என்பது ஒட்டுமொத்த மக்களின் வரி பணத்தில் செயல்படும் ஒரு இயந்திரம். போலி விவசாயிகளுக்கு கடன் கொடுத்து, அரசு கஜானாவை காலி செய்வது, அரசு இயந்திரத்தை முடங்க செய்யும்.

போலி விவசாயிகள் கொடுக்கும் ஆவணங்களில் கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் அலுவலர், வட்டாட்சியர் ஆகியோர் எந்த கள ஆய்வும் செய்யாமல், லஞ்சம் வாங்கி, கையெழுத்து போடுகின்றனர். கூட்டுறவு வங்கி அதிகாரிகளும் இந்த கொள்ளைக்கு உடந்தையாக உள்ளனர்.தகுதியான விவசாயிகளுக்கு மட்டுமே, கூட்டுறவு வங்கியில் கடன் கொடுக்க வேண்டும். விவசாயம் பாதிக்கப்பட்டால் மட்டுமே, கடன் தள்ளுபடி செய்ய வேண்டுமே தவிர, அற்ப அரசியல் காரணங்களுக்காக செய்யவே கூடாது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajas - chennai,இந்தியா
11-ஆக-202118:46:47 IST Report Abuse
Rajas மத்திய அரசு ரூபாய் 2992.75 கோடி ரூபாய்களை 42.16 லட்சம் பேரிடம் இருந்து (விவசாயிகள் என்ற பெயரில் வாங்கி கொண்டவர்கள்) திரும்ப வாங்கி கொண்டதாக விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பார்லிமென்டில் 21 ஜூலை 2021 அன்று தெரிவித்தார். இதில் அதிகபட்சமாக மிக சிறிய மாநிலமான அஸ்ஸாமில் மட்டும் 554.01 கோடி ரூபாய் 8.35 லட்சம் பேரிடம் இருந்து திரும்ப வாங்கப்பட்ள்ளது. அங்கே யார் ஆட்சியில் இருக்கிறார்கள்.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
11-ஆக-202116:04:38 IST Report Abuse
DVRR போலி விவசாயிகள் என்று யாருமேயில்லை நான் விவசாயி என்று ஒருவன் சொன்னால் அவன் என்ன விவசாயி ஆகிவிடுவானா என்ன? ஒரே வித்தியாசம் விவசாயிக்கும் விவசாயி இல்லாமல் தான் விவசாயி என்று டப்பா அடிப்பவன். விவசாயி தன நிலத்தை விட்டு அதிகபட்சம் 2 நாட்கள் தான் தூரத்தில் இருப்பான் அதற்கு மேல் அவன் இருந்தால் அவன் ஒரு ஏஜென்ட் இடை தரகன் மட்டுமே ஆவான் அவன் விவசாயி அல்லவே அல்ல. தினமும் நீர் பாய்ச்சுவது களை எடுப்பது உரமிடுவது கதிர் அறுப்பது என்று ஏதோ ஒரு வேலை என்று வைத்துக்கொண்டிருப்பான் விவசாயி. விவசாயி தனது நிலத்தை தனது குழந்தை போல பாவித்து அதை தினம் சென்று பார்த்து விடுவான். இந்த இடைத்தரகன் அல்லது மிராசுதார் தான் இந்த மாதிரி வீட்டை விட்டு பல வாரங்கள் கூட இருக்க முடியும். இது தான் விவசாயி யார் விவசாயி இல்லாத டப்பா அடிப்பவன் யார் என்று தெரிய ஒரே எளிய வழி.
Rate this:
Rajas - chennai,இந்தியா
11-ஆக-202118:51:35 IST Report Abuse
Rajasஅதாவது ஒரு விவசாயி 24 மணி நேரமும் விவசாயத்தை பார்க்க வேண்டும். சொந்தங்களின் திருமணம், குழந்தைகள் கல்வி, உடல் நலன் சரியில்லை, விவசாய பொருட்களை நகரங்களில் விற்பது என இரண்டு நாட்களுக்கு மேல் போக கூடாது. ஆனால் நாட்டை ஆள்பவர்கள் இந்தியாவில் எதாவது ஒரு பகுதியில் பஞ்சாயத்து தலைவர் தேர்தல் என்றால் பரிவாரங்களுடன் அங்கே பல நாட்கள் இருக்கலாம்....
Rate this:
Venkata Krishnan - Toronto ,கனடா
12-ஆக-202101:32:23 IST Report Abuse
Venkata Krishnanதங்களைப்போன்ற மாபெரும் விவசாயப் பேற றிஞர் அகில உலகெங்கிலும் கிடையாது.முற்றும் உணர்ந்த விவசாய ஞானியாகிய தாங்கள்தான் முழு இந்தியாவிற்கும்,ஏன் உலகிற்கே வழிகாட்டி உய்விக்க வேண்டும்....
Rate this:
Cancel
தமிழ்நாட்டுபற்றாளன் - கலைஞர் கருணாநிதி நகர் ,இந்தியா
11-ஆக-202113:59:57 IST Report Abuse
தமிழ்நாட்டுபற்றாளன் முதலில் நம்ப பழனியை கலை எடுங்கள் அவர் தான் நான் விவசாயி என்று சொல்லி உரை அடிச்சி உலையில் போட்டுள்ளார
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X