கினியாவில் 'மார்பர்க் வைரஸ்'; உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

Updated : ஆக 11, 2021 | Added : ஆக 11, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஜெனிவா : மேற்கு ஆப்ரிக்க நாடான கினியாவில் 'மார்பர்க்' என்ற வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.இதுகுறித்து உலக சுகாதார நிறுவன அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: மேற்கு ஆப்ரிக்க நாடான கினியாவில் லைபீரிய எல்லையில் உள்ள குய்கெடோவில் ஒருவரிடம் எபோலா போன்ற மார்பர்க் என்ற வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர் பலியான நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த மேலும்
Marburg, virus, West Africa

ஜெனிவா : மேற்கு ஆப்ரிக்க நாடான கினியாவில் 'மார்பர்க்' என்ற வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார நிறுவன அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: மேற்கு ஆப்ரிக்க நாடான கினியாவில் லைபீரிய எல்லையில் உள்ள குய்கெடோவில் ஒருவரிடம் எபோலா போன்ற மார்பர்க் என்ற வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர் பலியான நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த மேலும் நால்வருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்.


latest tamil news


மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் மார்பர்க் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. எபோலா, கோவிட் - 19 போன்று இதுவும் விலங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவும் தன்மை கொண்டது. வெளவால்களிலிருந்து பரவுவதாக கூறுகின்றனர். கடந்த 2ஆம் தேதி, தெற்கு குய்க்கெடோ மாகாணத்தில் மார்பர்க் வைரஸால் ஒருவர் இறந்தார். அவரது மாதிரிகளை பரிசோதனை செய்யப்பட்டது. வைரஸ் பரவல் குறித்து ஆய்வுகள் நடக்கிறது . 1967ல் ஜெர்மனியில் முதன் முதலில் மார்பர்க் வைரஸால் 7 பேர் இறந்தனர்.2005ல் ஆபிரிக்க நாடான காங்கோவில் 200 மேற்பட்டோர் இறந்தது குறிப்பிடத்தக்கது.


இப்பகுதியில் எபோலா வைரஸ் தடுப்பு பணிகளில் பங்கேற்ற எங்கள் குழுவினர் தற்போதும் உள்ளனர். அவர்கள் புதிய வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானவர் எங்கு சிகிச்சை பெற்றார் என, கண்டறியும் பணிகளை தொடங்கி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
LetsVALUE.org - Democracy,இந்தியா
11-ஆக-202108:08:11 IST Report Abuse
LetsVALUE.org உலக சுகாதார நிறுவனம் என்பதற்கு உலக வைரஸ் நிறுவனம் என்று மாற்று பெயரிட்டால் சரியாக இருக்குமா?
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
11-ஆக-202107:58:55 IST Report Abuse
Darmavan இது தவறான முடிவு. கிசோர் ஸ்வாமிக்கு குண்டர் சட்டம் இவனுக்கு ஜாமீன்.நல்ல நீதி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X