கினியாவில் மார்பர்க் வைரஸ்; உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை| Dinamalar

கினியாவில் 'மார்பர்க் வைரஸ்'; உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

Updated : ஆக 11, 2021 | Added : ஆக 11, 2021 | கருத்துகள் (2)
Share
ஜெனிவா : மேற்கு ஆப்ரிக்க நாடான கினியாவில் 'மார்பர்க்' என்ற வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.இதுகுறித்து உலக சுகாதார நிறுவன அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: மேற்கு ஆப்ரிக்க நாடான கினியாவில் லைபீரிய எல்லையில் உள்ள குய்கெடோவில் ஒருவரிடம் எபோலா போன்ற மார்பர்க் என்ற வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர் பலியான நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த மேலும்
Marburg, virus, West Africa

ஜெனிவா : மேற்கு ஆப்ரிக்க நாடான கினியாவில் 'மார்பர்க்' என்ற வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார நிறுவன அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: மேற்கு ஆப்ரிக்க நாடான கினியாவில் லைபீரிய எல்லையில் உள்ள குய்கெடோவில் ஒருவரிடம் எபோலா போன்ற மார்பர்க் என்ற வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர் பலியான நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த மேலும் நால்வருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்.


latest tamil news



இப்பகுதியில் எபோலா வைரஸ் தடுப்பு பணிகளில் பங்கேற்ற எங்கள் குழுவினர் தற்போதும் உள்ளனர். அவர்கள் புதிய வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானவர் எங்கு சிகிச்சை பெற்றார் என, கண்டறியும் பணிகளை தொடங்கி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X