கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஹிந்து கடவுள்களை விமர்சித்த பாதிரியாருக்கு நிபந்தனை ஜாமின்

Updated : ஆக 11, 2021 | Added : ஆக 11, 2021 | கருத்துகள் (86)
Share
Advertisement
மதுரை : ஹிந்து கடவுள்கள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்த வழக்கில், பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை ஜாமின் வழங்கியது.கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜாதி, மத விரோத உணர்வுகளை துாண்டும் வகையில் பேசியதாக, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது, அருமனை போலீசார் வழக்குப் பதிந் தனர். தலைமறைவான ஜார்ஜ்
ஹிந்து கடவுள்கள், பாதிரியார், ஜார்ஜ் பொன்னையா, ஜாமின்

மதுரை : ஹிந்து கடவுள்கள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்த வழக்கில், பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை ஜாமின் வழங்கியது.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜாதி, மத விரோத உணர்வுகளை துாண்டும் வகையில் பேசியதாக, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது, அருமனை போலீசார் வழக்குப் பதிந் தனர். தலைமறைவான ஜார்ஜ் பொன்னையாவை ஜூலை, 24ல் கைது செய்தனர்.

உயர்நீதிமன்றத்தில், அவர் தாக்கல் செய்த மனு: என் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது. சிறுபான்மையினருக்கு ஆளுங்கட்சி தந்த தேர்தல் வாக்குறுதிகள் புறக்கணிப்பு, ஆளுங்கட்சிக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டது சட்டவிரோதமல்ல. எனக்கு இருதய பிரச்னை உள்ளது. ஜாமின் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.


latest tamil news



நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். ஜாமின் அனுமதிக்க தமிழக அரசு, கன்னியாகுமரி விக்னேஷ் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. நீதிபதி பிறப்பித்த உத்தரவு:வரும் காலங்களில் இதுபோன்ற ஆட்சேபகரமான கருத்துக்களை வெளியிடமாட்டேன் என, மனுதாரர் தரப்பில் உத்தரவாதம் தாக்கல் செய்ய வேண்டும்.மறு உத்தரவு வரும் வரை, மனுதாரர் திருச்சியில் தங்கி தில்லைநகர் போலீசில், தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

தன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து, வழக்கை ரத்து செய்யக்கோரி ஜார்ஜ் பொன்னையா மற்றொரு மனு செய்தார். நீதிபதி ஜி.இளங்கோவன் விசாரித்தார். இதில், வி.எச்.பி., தரப்பில் ஆட்சேபம் தெரிவித்து மனு செய்ய அவகாசம் கோரப்பட்டது. நீதிபதி, செப்டம்பருக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

Advertisement




வாசகர் கருத்து (86)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-ஆக-202116:47:26 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren 0 Kkkkk
Rate this:
Cancel
11-ஆக-202116:47:20 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren Please don't repeat the same comment
Rate this:
Cancel
11-ஆக-202114:47:03 IST Report Abuse
சந்திரசேகர் எனக்கு தேவை மாதம் ஆயிரம் ரூபாய், விவசாய கடன் தள்ளுபடி என்கிற விதத்தில் என் கடன் தள்ளுபடி, கல்வி கடன் தள்ளுபடி, இலவசம் இலவசம் எல்லாமே இலவசம். ஆனால் இதில் நான் எதிலையும் பலன் அனுபவிக்க வில்லை. அப்புறம் நான் ஏன் வரி கட்ட வேண்டும். எனக்கு வரியை தயவுசெய்து தள்ளுபடி பண்ணுங்கள்.இனி நான் வாங்கும் பொருளுக்கு நேரடி விலையை மட்டும் சொல்லுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X