ஆய்வு; அரசு மருத்துவமனையில் தேசிய குழுவினர்...இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கு தயாராகிறது| Dinamalar

தமிழ்நாடு

ஆய்வு; அரசு மருத்துவமனையில் தேசிய குழுவினர்...இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கு தயாராகிறது

Added : ஆக 11, 2021
Share
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரியில், இக்கல்வியாண்டு முதல் மாணவர்கள் சேர்க்கையையொட்டி கல்லுாரியின் உட்கட்டமைப்பு குறித்து தேசிய மருத்துவ ஆணைய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் உதயமானதையடுத்து, சில நாட்களில் புதிய அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லுாரியும் அறிவிக்கப்பட்டது. சிறுவங்கூரில் 20 ஏக்கர்
ஆய்வு; அரசு மருத்துவமனையில் தேசிய குழுவினர்...இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கு தயாராகிறது

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரியில், இக்கல்வியாண்டு முதல் மாணவர்கள் சேர்க்கையையொட்டி கல்லுாரியின் உட்கட்டமைப்பு குறித்து தேசிய மருத்துவ ஆணைய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் உதயமானதையடுத்து, சில நாட்களில் புதிய அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லுாரியும் அறிவிக்கப்பட்டது. சிறுவங்கூரில் 20 ஏக்கர் பரப்பளவில் 382 கோடி ரூபாய் மதிப்பில் அரசு மருத்துவக் கல்லுாரி, மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடக்கிறது.புதிய மருத்துவமனை 7 தளங்களைக் கொண்டு, 700 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்படுகிறது. மாணவ மாணவிகள் விடுதிகள், மருத்துவ நிலைய அலுவலர் மற்றும் செவிலியர் குடியிருப்பு உள்ளிட்டவை கட்டப்படுகிறது.அதேபோல், மருத்துவக் கல்லுாரி வளாகமும் 7 தளங்களைக் கொண்டு கட்டப்படுகிறது.இந்நிலையில், புதியதாக கட்டப்படும் மருத்துவக் கல்லுாரியில் தேசிய மருத்துவ ஆணையக் குழுவினர் மூலம் ஆய்வு மேற்கொண்டு 2021-22ம் கல்வியாண்டு முதல் மாணவர்கள் சேர்க்கை நடத்துவதற்கு முயற்சிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.அதன்படி, தேசிய மருத்துவ ஆணையக் குழு உறுப்பினர்கள் டாக்டர்கள் அசோக்ெஷட்டி, வெங்கடேஷ் ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரிக்கு தேவையான உட்கட்டமைப்புகள் உள்ளதா என்பது குறித்து நேற்று ஆய்வு செய்தனர்.அதில், மருத்துவமனையில் சிகிச்சைகள், மருத்துவ வசதிகள், உபகரணங்கள், நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.மேலும், மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள், பேராசிரியர்கள் மற்றும் துணை பேராசிரியர்கள் நியமனங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, புதியதாக கட்டப்பட்டு வரும் மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை கட்டடத்தின் உட்கட்டமைப்பை பார்வையிட்டனர்.ஆய்வின் போது கல்லுாரி டீன்கள் கள்ளக்குறிச்சி உஷா, விழுப்புரம் குந்தவி தேவி, மருத்துவ கண்காணிப்பாளர் நேரு, டாக்டர் பழமலை மற்றும் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் உடனிருந்தனர்.தேசிய மருத்துவ ஆணையக் குழு ஆய்வறிக்கைக்கு பின், மாணவர்கள் சேர்க்கைக்கான அனுமதி பெறப்பட்டு, இக்கல்வியாண்டு முதல் 150 மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X