தமிழ்நாடு

துவக்கம்; இடைநின்ற மாணவ, மாணவிகள் கணக்கெடுப்பு14 ஒன்றியங்களில் 31ம் தேதி வரை நடத்த ஏற்பாடு

Added : ஆக 11, 2021
Share
Advertisement
கடலுார்-கடலுார் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் பள்ளி செல்லாதவர்கள், பள்ளியை விட்டு இடைவிட்டு நின்ற மாணவ, மாணவியரின் விவரங்களை கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது.மத்திய, மாநில அரசுகள் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக கல்வித் துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் சிலர் குடும்ப சூழ்நிலை, வறுமை, ஆர்வமின்மை உள்ளிட்ட காரணங்களால்
 துவக்கம்; இடைநின்ற மாணவ, மாணவிகள் கணக்கெடுப்பு14 ஒன்றியங்களில் 31ம் தேதி வரை நடத்த ஏற்பாடு

கடலுார்-கடலுார் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் பள்ளி செல்லாதவர்கள், பள்ளியை விட்டு இடைவிட்டு நின்ற மாணவ, மாணவியரின் விவரங்களை கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது.

மத்திய, மாநில அரசுகள் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக கல்வித் துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் சிலர் குடும்ப சூழ்நிலை, வறுமை, ஆர்வமின்மை உள்ளிட்ட காரணங்களால் பள்ளிக்கு செல்லாமலும், பள்ளியை விட்டு இடை நிற்பதுமாக உள்ளனர். இதனால் மாணவ, மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகளே இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் 6 முதல் 19 வயது வரையுள்ளவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்த மத்திய கல்வி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அறிவுறுத்தியுள்ளது. கடலுார் மாவட்டத்தில் கடலுார், அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, கீரப்பாளையம், புவனகிரி, பரங்கிப்பேட்டை, குமராட்சி, காட்டுமன்னார்கோவில், நல்லுார், விருத்தாசலம், மங்களூர், கம்மாபுரம் ஆகிய 14 ஒன்றியங்களில் கணக்கெடுப்பு பணி நேற்று துவங்கியது. இப்பணி வரும் 31ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணியில் வட்டார மேற்பார்வையாளர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 300 பேர் ஈடுபட்டுள்ளனர்.

பள்ளிக் கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பள்ளி செல்லாதவர்கள், பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களை கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது. பள்ளிகள் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகள், செங்கல் சூளை, கட்டடப் பணி, சாலைப் பணி, ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், இலங்கை அகதிகள் முகாம் என பல இடங்களில் கணக்கெடுப்பு பணி நடக்கிறது. இப்பணியின் போது, கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X