இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு; ஆர்.எஸ்.எஸ்., அறிவிப்பு

Updated : ஆக 11, 2021 | Added : ஆக 11, 2021 | கருத்துகள் (24) | |
Advertisement
புதுடில்லி: ''நம் சமூகத்தில் சமத்துவம் ஏற்படும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும் என்பது தான் எங்கள் நிலை,'' என, ஆர்.எஸ்.எஸ்., பொதுச் செயலர் தத்தாத்ரேயா ஹொசபலே குறிப்பிட்டார்.இந்தியா அறக்கட்டளை சார்பில் தலித் வரலாறு தொடர்பான புத்தக வெளியீட்டு விழா டில்லியில் நடந்தது. இதில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பொதுச் செயலர் தத்தாத்ரேயா ஹொசபலே பேசியதாவது: இந்தியாவின் வரலாறும், தலித்
RSS, Reservation, Historical Necessity, Our Country, RSS, General Secretary, இட ஒதுக்கீடு, ஆர்எஸ்எஸ், பொதுச்செயலர், தத்தாத்ரேயா ஹொசபலே

புதுடில்லி: ''நம் சமூகத்தில் சமத்துவம் ஏற்படும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும் என்பது தான் எங்கள் நிலை,'' என, ஆர்.எஸ்.எஸ்., பொதுச் செயலர் தத்தாத்ரேயா ஹொசபலே குறிப்பிட்டார்.

இந்தியா அறக்கட்டளை சார்பில் தலித் வரலாறு தொடர்பான புத்தக வெளியீட்டு விழா டில்லியில் நடந்தது. இதில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பொதுச் செயலர் தத்தாத்ரேயா ஹொசபலே பேசியதாவது: இந்தியாவின் வரலாறும், தலித் வரலாறும் வேறு வேறல்ல. தலித்துகளின் வரலாறு இல்லாமல் இந்தியாவின் வரலாறு முழுமையடையாது. சமூக நல்லிணக்கம் மற்றும் சமூக நீதி ஆகியவை எங்கள் அரசியல் கோஷங்கள் அல்ல. அவை எங்களுடைய முக்கியமான அடிப்படை நம்பிக்கை மற்றும் கோட்பாடு. நம் சமூகத்தில் சமத்துவம் இல்லை என குறிப்பிட்ட பிரிவினர் நினைக்கும் வரை இட ஒதுக்கீடு தொடர வேண்டும்.


latest tamil news


இட ஒதுக்கீடு தான் மிகவும் உறுதியான நடவடிக்கை. இட ஒதுக்கீடு மற்றும் அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைப்பது என இரண்டையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட சிலரை தலித் தலைவர் எனக் கூறுவதை நிறுத்த வேண்டும். அவர்கள் சமூக மாற்றத்துக்காக போராடியவர்கள். அவர்கள் அனைத்து சமூகத்துக்கும் சொந்தமானவர்கள். இட ஒதுக்கீடு தொடர ஆர்.எஸ்.எஸ்., எப்போதும் முழு ஆதரவு தருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INNER VOICE - MUMBAI,இந்தியா
11-ஆக-202122:34:13 IST Report Abuse
INNER VOICE எல்லா சலுகைகளும் கொடுத்து இடஒதுக்கீடு என்ற பெயரில் எல்லா உதவிகளையும் செய்து , நல்ல மதிப்பெண் வாங்கின முன்னோக்கு சமுதாய மாணவர்களுக்கு சலுகைகள் இல்லாமல் பின் தள்ளி விட்டார்கள். எழுபத்து ஐந்து ஆண்டுகள் கழிந்தும் முன்னுக்கு வராதபோது இனியும் என்ன கொடுமை இது? இந்தியன் எல்லோருக்கும் சம உரிமையாக்க வேண்டும்.
Rate this:
Cancel
11-ஆக-202120:00:10 IST Report Abuse
அப்புசாமி ஓட்டு வாங்கி ஆட்சியில் இருக்க வேறு வழி?
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
11-ஆக-202115:10:46 IST Report Abuse
Vena Suna RSS பதவியை அப்போ ஒரு தலித்துக்கு கொடு. ஹிஹிஹி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X