புதுடில்லி: இந்தியாவில் மேலும் 40 ஆயிரம் பேர் கோவிட் பாதிப்பில் இருந்து குணமடைந்தனர். நாடு முழுவதும் தற்போது 3.86 லட்சம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். கடந்த 140 நாட்களில் இதுவே மிகக்குறைவாகும்.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 38,353 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 3 கோடியே 20 லட்சத்து 36 ஆயிரமாக பதிவானது. ஒரே நாளில் 40,013 பேர் கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே 12 லட்சத்து 20 ஆயிரத்தை தாண்டியது. தற்போது 3.86 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 497 பேர் பலியானதை அடுத்து, உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,29,179 ஆனது.

இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 97.45 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.34 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 1.21 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தடுப்பூசி
இந்தியாவில் இன்று (ஆகஸ்ட் 11) காலை 8 மணி நிலவரப்படி 51.90 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், நேற்று மட்டும் 41,38,646 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

உலக பாதிப்பு
இன்று (ஆகஸ்ட் 11-ம் தேதி) காலை 10:10 மணி நிலவரப்படி உலகில் கோவிட் தொற்றால் 20 கோடியே 47 லட்சத்து 94 ஆயிரத்து 249 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 43 லட்சத்து 27 ஆயிரத்து 093 பேர் பலியாகினர். 18 கோடியே 39 லட்சத்து 24 ஆயிரத்து 269 பேர் மீண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE