ரெய்டில் எடுத்தது என்ன... லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

Added : ஆக 11, 2021 | கருத்துகள் (31)
Advertisement
முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வீடு உள்ளிட்ட பல இடங்களில், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடத்திய ரெய்டுகளில் என்னென்ன எடுக்கப்பட்டது என்று, துறை சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது: வேலுமணியின் வீடு, பண்ணை வீடு, உறவினர்கள், நண்பர்கள், சென்னை மற்றும் கோவை மாநகராட்சி அதிகாரிகளின் வீடுகள், நிறுவன அலுவலகங்கள் என மொத்தம் 60 இடங்களில்,
வேலுமணி, ரெய்டு, லஞ்ச ஒழிப்புத்துறை

முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வீடு உள்ளிட்ட பல இடங்களில், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடத்திய ரெய்டுகளில் என்னென்ன எடுக்கப்பட்டது என்று, துறை சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: வேலுமணியின் வீடு, பண்ணை வீடு, உறவினர்கள், நண்பர்கள், சென்னை மற்றும் கோவை மாநகராட்சி அதிகாரிகளின் வீடுகள், நிறுவன அலுவலகங்கள் என மொத்தம் 60 இடங்களில், அதாவது, கோவையில், 42; சென்னையில், 16; காஞ்சிபுரம் மற்றும் திண்டுக்கல்லில் தலா ஓரிடத்தில் சோதனை நடத்தப்பட்டது.சந்தேகத்துக்கு இடமான தொழில் நிறுவன வளாகங்களிலும், சோதனை மேற்கொள்ளப்பட்டது.


latest tamil news






இந்தச் சோதனைகளில், 13 லட்சத்து, 8,500 ரூபாய் ரொக்கம், நிலப்பத்திரங்கள், தொழில் நிறுவனங்களின் வர்த்தக பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள், இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள டெபாசிட் ஆவணம். மாநகராட்சிகளின் அலுவலக கோப்புகள், எலக்ட்ரானிக் ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. விசாரணை தொடர்ந்து நடக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

-நமது நிருபர்-

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
12-ஆக-202102:17:11 IST Report Abuse
BASKAR TETCHANA வருமானத்துறை அதிகாரிகளுக்கும் இதை செய்ய சொன்ன ஸ்டாலினுக்கும் இதற்க்கு துணை போன கந்தசாமிக்கு உத்தரவு கொடுத்து ஆயிரம் போலீசாரை பாதுகாப்புக்கு அனுப்பிய டி.ஜி.பி.க்கும் கிடைத்த அல்வா.ஜெய் ஹிந்த்.
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
11-ஆக-202119:22:39 IST Report Abuse
Nagarajan D பிம்பிளிக்கி பியம்பீ....
Rate this:
Cancel
Hari - chennai,இந்தியா
11-ஆக-202118:43:15 IST Report Abuse
Hari இதெல்லாம் இற்றைய பொதுப்பணித்துறை அமைச்சரின் வீட்டில் அன்று கிடைத்த ஒருமுட்டைக்கு ஈடாகுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X