முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வீடு உள்ளிட்ட பல இடங்களில், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடத்திய ரெய்டுகளில் என்னென்ன எடுக்கப்பட்டது என்று, துறை சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: வேலுமணியின் வீடு, பண்ணை வீடு, உறவினர்கள், நண்பர்கள், சென்னை மற்றும் கோவை மாநகராட்சி அதிகாரிகளின் வீடுகள், நிறுவன அலுவலகங்கள் என மொத்தம் 60 இடங்களில், அதாவது, கோவையில், 42; சென்னையில், 16; காஞ்சிபுரம் மற்றும் திண்டுக்கல்லில் தலா ஓரிடத்தில் சோதனை நடத்தப்பட்டது.சந்தேகத்துக்கு இடமான தொழில் நிறுவன வளாகங்களிலும், சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்தச் சோதனைகளில், 13 லட்சத்து, 8,500 ரூபாய் ரொக்கம், நிலப்பத்திரங்கள், தொழில் நிறுவனங்களின் வர்த்தக பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள், இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள டெபாசிட் ஆவணம். மாநகராட்சிகளின் அலுவலக கோப்புகள், எலக்ட்ரானிக் ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. விசாரணை தொடர்ந்து நடக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-நமது நிருபர்-
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE