இந்தியாவில் 10 வயதிலேயே புகையிலையை பயன்படுத்தும் சிறுவர்கள்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

Updated : ஆக 11, 2021 | Added : ஆக 11, 2021 | கருத்துகள் (10) | |
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் உள்ள சிறுவர்கள் 10 வயதுக்கு உள்ளாகவே புகையிலையை ஏதாவது ஒரு வடிவில் பயன்படுத்தத் துவங்கி விடுவது, சர்வதேச இளைஞர்களுக்கான புகையிலை குறித்த ஆய்வில் தெரியவந்துள்ளது.சர்வதேச இளைஞர்களுக்கான புகையிலை குறித்த ஆய்வறிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று (ஆக., 10) வெளியிட்டார். அதில் தெரிவித்து உள்ளதாவது:பல்வேறு

புதுடில்லி: இந்தியாவில் உள்ள சிறுவர்கள் 10 வயதுக்கு உள்ளாகவே புகையிலையை ஏதாவது ஒரு வடிவில் பயன்படுத்தத் துவங்கி விடுவது, சர்வதேச இளைஞர்களுக்கான புகையிலை குறித்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
சர்வதேச இளைஞர்களுக்கான புகையிலை குறித்த ஆய்வறிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று (ஆக., 10) வெளியிட்டார். அதில் தெரிவித்து உள்ளதாவது:



latest tamil news



பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 13 முதல் 15 வயதுள்ள பள்ளி செல்லும் சிறுவர்களிடையே புகையிலைப் பயன்பாடு குறித்து ஐ.ஐ.பி.எஸ்., மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் 4வது உலகளாவிய இளைஞர் புகையிலை சர்வே நடத்தப்பட்டது.

இதில் இந்தியாவில் உள்ள சிறுவர்களில் ஐந்தில் ஒருவர், புகையிலை பழக்கத்திற்கு உள்ளாகின்றனர். குறிப்பாக, புகையிலையை பயன்படுத்துதல் பள்ளி செல்லும் மாணவர்களிடையே குறிப்பாக அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் மாநிலங்களில் அதிகமாக இருக்கிறது. இமாச்சலப் பிரதேசம், கர்நாடக மாநிலங்களில் மாணவர்களிடையே புகையிலை பழக்கம் குறைவாக இருக்கிறது.


latest tamil news



10 வயதுக்கு உள்ளாகவே, 38 சதவீத சிறுவர்கள் சிகரெட் புகைக்கப் பழகிவிடுகிறார்கள்; 47 சதவீதம் பேர் பீடி புகைக்கவும்; 52 சதவீதம் பேர் புகையிலையை வேறு வடிவத்தில் பயன்படுத்தவும் பழகிவிடுகிறார்கள். சிகரெட் புகைப்பவர்களில் சராசரி வயது 11.5 ஆகவும், பீடி புகைப்பவர்களின் சராசரி 10.5 வயதாகவும், புகையிலையை வேறு வடிவத்தில் பயன்படுத்துவது 9.9. வயதிலும் தொடங்குகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஆக-202108:40:19 IST Report Abuse
அப்புசாமி இகைஞர்களுக்கு தன்னம்பிக்கை நிறைய வந்திருக்காம். பெரியவர் சொல்றாரு.
Rate this:
Cancel
Arul Narayanan - Hyderabad,இந்தியா
11-ஆக-202120:13:57 IST Report Abuse
Arul Narayanan 10 வயதுக்கு உள்ளாகவே 38% சிறுவர்கள் சிகரெட் பிடிக்கிறார்கள். நம்ப முடியாது.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
11-ஆக-202115:05:05 IST Report Abuse
அசோக்ராஜ் கலிகாலம்டே. பெண்குட்டிகள் பத்து வயசிலேயே பெரிய மனுசி ஆயிடறாங்க. ஆண்குட்டி ஒரு பீடி பத்த வைக்கக் கூடாதா? பெரிய மனுசன் ஆனதுக்கு ஒரு அடையாளம் வேணாமா?
Rate this:
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
11-ஆக-202118:38:57 IST Report Abuse
RAMAKRISHNAN NATESANதல சிகரெட்டு பீடி இதெல்லாம் ஆண்மையை பாதிக்கும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X