லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி; தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைப்பு| Dinamalar

லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி; தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைப்பு

Updated : ஆக 11, 2021 | Added : ஆக 11, 2021 | கருத்துகள் (8) | |
புதுடில்லி: லோக்சபாவில் 17வது நாளாக இன்றும் (ஆக.,11) எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்துள்ளார்பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 19ம் தேதி முதல் ஆக.,13ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. லோக்சபா, ராஜ்யசபா ஆகிய இரு அவைகளிலும் கூட்டத்தொடரின் முதல்நாளில் இருந்து வேளாண்
LokSabha, Adjourned, Opposition, Ruckus, MPs, Sine Die, லோக்சபா, எதிர்க்கட்சிகள், அமளி, ஒத்திவைப்பு

புதுடில்லி: லோக்சபாவில் 17வது நாளாக இன்றும் (ஆக.,11) எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்துள்ளார்

பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 19ம் தேதி முதல் ஆக.,13ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. லோக்சபா, ராஜ்யசபா ஆகிய இரு அவைகளிலும் கூட்டத்தொடரின் முதல்நாளில் இருந்து வேளாண் சட்டங்கள், பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஆகிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும் எனக்கூறி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தன. இதனால், 16 நாட்களாக இரு அவைகளும் முடங்கின. பார்லி., பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அமளிக்கு நடுவே சில மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வந்தன.


latest tamil news


இந்நிலையில், கூட்டத்தொடரின் 17வது நாளான இன்று (ஆக.,11) லோக்சபா துவங்கியவுடன், மீண்டும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். அமளியால் தொடர்ந்து லோக்சபா முடங்கி வருவதால், அவையை 2 நாள்களுக்கு முன்னதாகவே முடித்துக் கொள்ளப்படுவதாக கூறி, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X