பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி போடாமல் கூட்டமான இடத்திற்கு செல்ல வேண்டாம்: சுகாதார செயலர்

Updated : ஆக 11, 2021 | Added : ஆக 11, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
சென்னை: தடுப்பூசி போடாமல், கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் என தமிழக சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நிருபர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தமிழகத்தில் இரண்டாவது அலை குறைந்தாலும் சென்னை, கோவை, ஈரோடு மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால், தினசரி கோவிட்டால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை
ராதாகிருஷ்ணன், சுகாதார செயலர்,  தடுப்பூசி, கோவிட், கொரோனா,

சென்னை: தடுப்பூசி போடாமல், கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் என தமிழக சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நிருபர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தமிழகத்தில் இரண்டாவது அலை குறைந்தாலும் சென்னை, கோவை, ஈரோடு மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால், தினசரி கோவிட்டால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக 2 ஆயிரத்தை நெருங்குகிறது. இது வருத்தம் அளிக்கிறது. தமிழகத்தில் 38 சதவீதம் பேர் மட்டுமே சரியாக மாஸ்க் அணிகிறார்கள். கூட்டமான இடத்திற்கு செல்பவர்கள் பலர் தடுப்பூசி போட்டு கொள்ளவில்லை. தடுப்பூசி போடாமல், கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம். அப்படி செல்வதால், கோவிட் பாதிப்பு அதிகரிக்கம்.


மாஸ்க் சரியாக அணிபவர்கள் 38 சதவீதம் பேர் மட்டுமே

latest tamil news





கூட்டம் கூடுவதால் கோவிட் தொற்று அதிகரிக்கிறது. சென்னையில் 300 பேர் கூடிய இடத்தில் 24 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டு உள்ளது. ஒருவர் மரணமடைந்தார். அவருக்குநீரழிவு நோய் இருந்தது. தடுப்பூசியும் போட்டு கொள்ளவில்லை. அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் சமூக இடைவெளி இல்லை. கோவிட் குறித்த விழிப்புணர்வுவும், மனமாற்றமும் மக்களுக்கு தேவை. மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கோவிட் இல்லை என்ற இலக்கை எட்ட முடியும். தடுப்பூசி போடுகள் என்று வீதி வீதியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் சிலர் தடுப்பூசி போடுவதில்லை. கோவிட்டை பொது மக்கள் அலட்சியமாக நினைக்க வேண்டாம். அடையாளம் தெரியாத மனித வெடிகுண்டை போல் கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம். இதனால், தேவையற்ற கூட்டத்தை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
11-ஆக-202123:09:51 IST Report Abuse
Pugazh V @ Soumya - Trichy - இங்கே கோவையில் டாஸ்மாக் ல கூட்டமே இல்லை. ஒருநடை வாங்கோ. திருச்சி லேர்ந்து ஜஸ்ட் 5 மணிநேரம் போறும். காலம்பர 7 மணிக்கு கிளம்பி கோவைக்கு வந்து லன்ச் சாப்பிட்டு விட்டு டாஸ்மாக் ல சரக்கு வாங்கிண்டு மதியம் 3 மணிக்கு திரும்பி னால் ராத்திரி 8 மணிக்கு திருச்சி. கச்சேரி ஆரம்பிக்க பெஸ்ட் டைம்.
Rate this:
Cancel
11-ஆக-202119:44:18 IST Report Abuse
அப்புசாமி முதல்ல தேவையான தடுப்பூசி ஒன்றிய அரசு குடுத்தாங்களா இல்லையான்னு தெளிவாச் சொல்லுங்க.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
11-ஆக-202119:25:19 IST Report Abuse
Pugazh V வேல்மணி வீட்டுக்கு முன் கூட்டம் கூடியதே.. எதற்காக தெரியுமா? அந்த ஊழல்கள் மற்றும் கொள்ளைகளில் இருந்து மக்களின் கவனத்தை திருப்பத் தான். கூட்டம் போடாதீர்கள் என்று காவல்துறை அவர்களை விரட்டி தண்ணீர் பாய்த்து தடியடி எதாவது நடத்தி.. அதனால் ஒரு கலவரம் மருத்துவ மனை என்று ஸீன் போடப் பார்த்தார்கள். சைலேந்திர பாபு சாரிடம் நடக்குமா?
Rate this:
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
12-ஆக-202106:25:47 IST Report Abuse
RAMAKRISHNAN NATESANஐயோ கொல்றாங்களே இது போன்ற அசிங்கத்தை எல்லோரும் செய்ய மாட்டாங்க புகழ்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X