அனைத்து கட்சிகளுடன் சபாநாயகர் ஆலோசனை

Updated : ஆக 11, 2021 | Added : ஆக 11, 2021 | கருத்துகள் (17) | |
Advertisement
புதுடில்லி: எம்.பி.,க்கள் அமளி காரணமாக, லோக்சபா கூட்டத்தொடர் எதிர்பார்த்தபடி நடக்காதது வருத்தமாக உள்ளதாக, சபாநாயகர் ஓம்பிர்லா கூறியுள்ளார்.தொடர்ந்து, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்கள், பார்லிமென்ட் வளாகத்தில் ஓம்பிர்லாவை சந்தித்து பேசினர்.எதிர்க்கட்சிகள் கடும் அமளி காரணமாக லோக்சபா இரண்டு நாட்களுக்கு
loksabha, ombirla, parliment

புதுடில்லி: எம்.பி.,க்கள் அமளி காரணமாக, லோக்சபா கூட்டத்தொடர் எதிர்பார்த்தபடி நடக்காதது வருத்தமாக உள்ளதாக, சபாநாயகர் ஓம்பிர்லா கூறியுள்ளார்.தொடர்ந்து, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்கள், பார்லிமென்ட் வளாகத்தில் ஓம்பிர்லாவை சந்தித்து பேசினர்.
எதிர்க்கட்சிகள் கடும் அமளி காரணமாக லோக்சபா இரண்டு நாட்களுக்கு முன்னதாக காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

இதன் பின்னர் சபாநாயகர் ஓம்பிர்லா நிருபர்களிடம் கூறியதாவது: நான் எதிர்பார்த்தபடி, கூட்டத்தொடர் அமையாதது வேதனை அளிக்கிறது. அவையில், அதிகளவு பணிகள் நடப்பதற்கும், மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகள் விவாதிக்கப்படுவதற்கும் முயற்சி செய்வேன்.

ஆனால், இந்த முறை தொடர்ச்சியாக தடைகள் இருந்தன. இதனை தீர்க்க முடியவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக, கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமானதாக இருந்தது. நள்ளிரவு நேரத்திலும் கூட விவாதம் நடந்தது. கோவிட் காலத்திலும், எம்.பி.,க்கள் அவை சிறப்பாக செயல்படுவதற்கு தங்களது பங்களிப்பை அளித்தனர்.

அவையின் கண்ணியத்தை எம்.பி.,க்கள் காக்க வேண்டும் என நான் விரும்புவேன். அவையில் விவாதங்கள், உடன்பாடு மற்றும் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், அவையின் கண்ணியத்தை குறைக்கக்கூடாது.

பார்லிமென்ட் பாரம்பரியம் மற்றும் அதன் கண்ணியத்தை காக்கும் வகையில் அவை நடத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். கோஷம் போடுவதும், பேனர்கள் எழுப்புவதும் பார்லிமென்ட் கலாசாரத்தில் கிடையாது. தங்களது உணர்வுகளை, எண்ணங்களை தங்களது இருக்கைகளில் இருந்தே எம்.பி.,க்கள் வெளிப்படுத்த வேண்டும். புதிய பார்லிமென்ட் வளாகத்தில், இந்தியாவில் 75வது சுதந்திர தினம் கொண்டாடுவோம். இதற்கான முயற்சிகள் செய்யப்படும்.


latest tamil news


லோக்சபா 21 மணி நேரம் 21 நிமிடங்கள் மட்டுமே செயல்பட்டது. மொத்தமுள்ள 96 மணி நேரத்தில் 74 மணி நேரம் 46 நிமிடங்களுக்கு பணிகள் செய்ய முடியவில்லை. 22 சதவீத பணிகள் மட்டுமே செயல்பட்டது. 20 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. ஓபிசி சட்டம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு ஓம் பிர்லா கூறினார்.



சந்திப்பு


latest tamil news


தொடர்ந்து, ஓம் பிர்லாவை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா, லோக்சபா காங்., குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சிரோண்மனி அகாலிதளம், திரிணமுல், ஓய்எஸ்ஆர்காங்கிரஸ், பீஜூ ஜனதா தளம் மற்றும் திமுக எம்.பி.,க்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.


latest tamil news




latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
11-ஆக-202119:30:43 IST Report Abuse
sankaseshan ஆ தெரியாததால் ஐநா சபை பாதுகாப்பு Council தலைவர் ஆகியுள்ளார்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
11-ஆக-202119:22:01 IST Report Abuse
sankaseshan கல்வி சேவை இலவசமாகவா கொடுக்கறாங்க ? இடம் 99 வருட குத்தகைக்கு வெள்ளைக்காரன் கொடுத்தது , அரசு பண உதவி செய்கிறது இதுல பெருமை பேச வெட்கமா இல்லை வெள்ளைக்காரன் வரத்துக்கு முன்பே நாட்டில் குரு கு லம் , திண்ணை பள்ளி கூடங்கள் இருந்தன Mechale இவற்றை ஒழித்து கட்டி ஆங்கில கல்வியை புகுத்தினான் ஜப்பான் சீனாவில் இவங்க குயி த்தி பலிக்கவில்லை இன்றும் தாய் மொழி கல்விதான் மத மாற்றம் கிடையாது
Rate this:
Cancel
yavarum kelir - yadhum vore ,இந்தியா
11-ஆக-202116:24:55 IST Report Abuse
yavarum kelir படத்தில் யார் வெள்ளை தோலில் ஒரு பெண்மணி ? இந்திய மரபுக்கு சம்பந்தமே இல்லாமல்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X