ஆகம விதிப்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் நியமனம்: அமைச்சர் சேகர்பாபு

Updated : ஆக 11, 2021 | Added : ஆக 11, 2021 | கருத்துகள் (161)
Advertisement
சென்னை: அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற திட்டத்தின்படி 207 பேர் பயிற்சி பெற்றுள்ளதாகவும், முறையாக ஆகம விதிகளின்படி அவர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.சென்னை பாரிமுனையில் உள்ள கச்சாலீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம்
அனைத்து சாதியினர், அர்ச்சகர், ஆகமவிதி, அமைச்சர், சேகர்பாபு

சென்னை: அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற திட்டத்தின்படி 207 பேர் பயிற்சி பெற்றுள்ளதாகவும், முறையாக ஆகம விதிகளின்படி அவர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை பாரிமுனையில் உள்ள கச்சாலீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை என்பது சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் வந்துகொண்டிருக்கிறது. கோசாலைகள், குளங்கள், தேர்கள் போன்றவற்றை பராமரிக்க வேண்டும். இது குறித்தான குறைகளை நிவர்த்தி செய்ய உள்ளோம். இதுவரை 80 கோயில்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. திருக்கோயில்களில் ஆய்வு செய்து, குடமுழுக்கு பணிகளை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


latest tamil news


அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற திட்டத்தின் படி 207 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். அதில், 75 பேர் 35 வயதை கடந்தவர்களாக உள்ளனர். இதனால் 35 வயதுக்குட்பட்டவர்கள் முதலில் நியமனம் செய்யப்படும். அதில், முறையாக ஆகம விதிகளின்படி நியமிக்கப்பட உள்ளனர். கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு புதிய சட்டங்கள் கொண்டு வருவது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (161)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jeans bala - CHENNAI,இந்தியா
17-ஆக-202116:37:59 IST Report Abuse
jeans bala ஸ்வாமி நித்தியானந்தர் சொன்னது போல் இந்துமதம் இங்கு இருப்பவர்களே அழித்து விடுகிறார்கள் ஆரியர்கள் திராவிடர்கள் போட்டி சண்டை ஆரம்பமாகட்டும் பிராமிணர்கள் காலம்தொட்டு சன்ஸ்க்ரிட் மந்திரம் சொல்லி வந்தார்கள் அவர்களை துரத்தி விட்டு தமிழில் சொல்வார்கள் என்ன கொடுமை சார் இது இந்தியில் சொன்னால் கூட நன்றாகத்தான் இருக்கும் இந்து கோயில்கலை மட்டும் அரசாங்கம் எடுத்து கொள்கிறது கோயில் ஆகம விதிப்படி நடத்தவேண்டும் அரசியல் செய்யாமல் கோயில்களில்( இந்து ) மட்டும் தலையிடுவது அவர்களுக்கே ஆப்பு?
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
12-ஆக-202117:07:22 IST Report Abuse
தமிழ்வேள் சேகர் பாபு மாரீசனை / கும்பகர்ணனை போன்றவர் என நினைக்கிறன் ..அதாவது ஸ்ரீ ராமனை பற்றி எத்தனைதான் எடுத்துச்சொன்னாலும் ராவணேஸ்வரன் கேட்கப்போவதில்லை ..அழிவு எப்படியும் நிச்சயம் ...ராவணன் கையால் அழிவதைவிட ஸ்ரீ ராமன் கையால் அழிந்தால் மோக்ஷம் நிச்சயம் என்றே இவர்கள் ஸ்ரீ ராமனோடு சண்டைக்கு நின்றார்கள் ..அதைப்போல திராவிஷா ராமசாமி கும்பல் நல்லது எதை சொன்னாலும் கேட்காது ...அதனோடு முட்டிக்கொளவதற்கு பதில் கோவில்களில் பகவத் விஷயங்களில் தாறுமாறாக விளையாடினால் ,இறைவன் கோபத்துக்கு தான் அழிவதோடு இந்த திராவிட கும்பலும் கொண்டபோது அழிவது நிச்சயம் - என்ற எண்ணத்தில் ராமசாமி கும்பலை விட தீவிரமாக சனாதன தர்ம சிதைப்பில் ஈடுபடுகிறார் போலும் ...அப்படிப்பட்ட எண்ணம் ஒன்று இருந்தால் , சுபஸ்ய சீக்கிரம் -என்ற பொருளில் அன்னாரது எண்ணம் நிறைவேற வாழ்த்துவோம் .....இவர் முடிவோடு ஸமஸ்த ராமசாமி கும்பலும் நாசமாக போகும் ..போகட்டும் ...தமிழகத்துக்கு ரொம்ப நல்லது
Rate this:
Cancel
Swami Selvam - Tamilnadu,இந்தியா
12-ஆக-202112:44:40 IST Report Abuse
Swami Selvam சரி சேகர் பாபு அது என்ன கோயில்களில் மட்டும் ஜாதி இல்லை அனைவரும் சமம் ஆனால் உங்கள் ஆரம்ப பாலகர் பள்ளியில் சேர்க்கவே ஜாதி சான்று வேண்டுமே ஆரம்பமே ஜாதியுடன் உள்ளதே பள்ளிகளில் கல்லூரிகளில் அரசு அலுவலகங்களில் திறமை உள்ளவர்களுக்கு இடம் இல்லையே ஜாதி அடிப்படையில் இடம் கொடுக்குறீர்ககள் அங்கு ஜாதிகளால் மக்கள் குழந்தைகள் பாதிக்க படுகிறதே. ஒரு சமூகத்தை அழிக்க நினைக்கும் தங்கள் அரசு மற்ற சமூகங்களை இட ஒதுக்கீட்டால் அழித்து கொண்டு இருக்கும் திராவிஷ அரசு என்ன செய்ய. உங்கள் அரசுக்கு திராணி இருந்தால் அரசு சார்ந்த எந்த துறையிலும் ஜாதி சான்று கேட்கமாட்டோம் திறமைக்கு மட்டுமே முதலிடம் என்று ஒரு சட்டமன்ற ஆண் மகன் இருக்கார்களா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X