இளைஞர்களின் தன்னம்பிக்கை அதிகரித்து வருகிறது: பிரதமர் பேச்சு

Updated : ஆக 11, 2021 | Added : ஆக 11, 2021 | கருத்துகள் (12) | |
Advertisement
புதுடில்லி: இந்தியாவில், இளைஞர்களின் தன்னம்பிக்கை அதிகரித்து வருகிறது எனவும், அதனை நோக்கி அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.சிஐஐ வருடாந்திர கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: தொழில்துறையில் உள்ளவர்கள், இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றனர். உங்களின் முயற்சியால், இந்திய பொருளாதாரம் மீண்டும் வேகமெடுத்துள்ளது. சிஇஓ ஒரு
இளைஞர்கள், பிரதமர், மோடி, நரேந்திர மோடி,

புதுடில்லி: இந்தியாவில், இளைஞர்களின் தன்னம்பிக்கை அதிகரித்து வருகிறது எனவும், அதனை நோக்கி அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

சிஐஐ வருடாந்திர கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: தொழில்துறையில் உள்ளவர்கள், இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றனர். உங்களின் முயற்சியால், இந்திய பொருளாதாரம் மீண்டும் வேகமெடுத்துள்ளது. சிஇஓ ஒரு நாள் அறிக்கை வெளியிடாமல் இருப்பதும், புதிய வாய்ப்புகள் இல்லை எனக்கூறுவதும் அரிதாக தான் இருக்கும். புதிய உலகத்துடன் இணைந்து வளர்வதற்கு இந்தியா தயாராக உள்ளது. அதற்கு உறுதி பூண்டுள்ளது. ஒரு காலத்தில் அந்நிய முதலீட்டை பெறுவதற்கு பயந்த இந்தியா, இன்று அனைத்து வகை முதலீடுகளையும் வரவேற்கிறது. இந்தியாவில் சாதனை அளவு அந்நிய முதலீடு வந்து கொண்டு உள்ளது.தொழிலை எளிதாக செய்வதற்கான பட்டியலில் முன்னேறுவதற்கு இந்தியா முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.


latest tamil news


சூழ்நிலை தொடர்ந்து மாறி வருகிறது. இன்று, இந்தியாவில் தயாரான பொருட்கள் அடிப்படையில் மக்களின் உணர்வுகள் உள்ளன. ஒரு பொருளை தயாரிக்கும் நிறுவனம் இந்தியாவை சார்ந்ததாக இல்லாவிட்டாலும், ஒவ்வொரு இந்தியரும், உள்நாட்டில் தயாரான பொருளை பயன்படுத்தவே விரும்புகின்றனர். இதற்கு ஏற்ப நாட்டை மாற்ற வேண்டும். அதற்கு ஏற்றவாறு தொழில்துறையினர் தங்களின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை மாற்ற வேண்டும். ஒரு காலத்தில் விவசாயத்துறை வாழ்வாதாரத்திற்கான காரணியாக மட்டும் பார்க்கப்பட்டது. ஆனால், இன்று, இந்திய விவசாயிகளை உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுடன் இணைக்கும் வகையில், விவசாய துறையில் வரலாற்று சிறப்பு மிக்க சீர்திருத்தம் செய்யப்பட்டது.

இந்தியர்களின் தன்னம்பிக்கை அதிகரித்து வருகிறது. அதனை நோக்கி அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். இதனை ஒலிம்பிக் போட்டிகளில் உணர்ந்து கொள்ள முடியும். களத்திற்கு வரும் இளைஞர்கள் மனதில் எந்த தயக்கமும் இல்லை. கடினமாக உழைக்கவும், துணிச்சலான முடிவுகளை எடுக்கவும் விரும்புகின்றனர். அவர்கள் முடிவுகளை கொடுக்க விரும்புகின்றனர். இந்திய ஸ்டார்ட் அப்களிலும் தன்னம்பிக்கை அதிகரித்து உள்ளது. இவ்வாறு பிரதமர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஆக-202112:35:01 IST Report Abuse
அப்புசாமி ஆமாம். பசங்க 10 வயசிலேயே பீடி குடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.
Rate this:
Cancel
Naresh Giridhar - Chennai,இந்தியா
12-ஆக-202108:26:04 IST Report Abuse
Naresh Giridhar " இந்தியாவில், இளைஞர்களின் தன்னம்பிக்கை அதிகரித்து வருகிறது " . இந்தியாவில் இருக்கும் இளைஞர்கள் இவரை தனியாக கூப்பிட்டு சொன்னாங்க.
Rate this:
Cancel
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
12-ஆக-202104:48:22 IST Report Abuse
Nepolian S ஏதாவது பேசனுமுனு கம்பி கட்டுற கதையெல்லாம் எடுத்து விடுது பாரு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X