தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 1,964 ஆக அதிகரிப்பு: 1,917 பேர் நலம்

Updated : ஆக 11, 2021 | Added : ஆக 11, 2021 | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை1,893-ல் இருந்து 1,964 ஆக அதிகரித்துள்ளது. 28 பேர் உயிரிழந்து உள்ளனர். 1917 பேர் குணமடைந்து உள்ளனர். இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் மட்டும் 1,62,791 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன.அதில், தமிழகத்தில் 1,964பேருக்கு கோவிட் உறுதியானது.

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை1,893-ல் இருந்து 1,964 ஆக அதிகரித்துள்ளது. 28 பேர் உயிரிழந்து உள்ளனர். 1917 பேர் குணமடைந்து உள்ளனர்.



latest tamil news




இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் மட்டும் 1,62,791 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன.அதில், தமிழகத்தில் 1,964பேருக்கு கோவிட் உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,81,094 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 3,91,65,548 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கோவிட் உறுதியானவர்களில் 1,121பேர் ஆண்கள், 843 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 15,07,615 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 10,73,441 ஆகவும் அதிகரித்து உள்ளது. 1,917 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,26,317 ஆக உயர்ந்துள்ளது.

28 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 5 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 23 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,395 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


சென்னை முதலிடம்



சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிகை அதிகரித்துள்ளது. மேலும் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் முதலிடத்தை பிடித்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 208 ஆக இருந்த நிலையில் இன்று(11ம் தேதி) 243 ஆக அதிகரித்துள்ளது.இவ்வாறு சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது


மாவட்ட வாரியாக விபரம்



latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X