சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : ஆக 11, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
'இன்னும் ஒரு சில மாதங்களில், தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானவற்றை தமிழக அரசு நிறைவேற்றாவிடில், மக்களிடம் கெட்ட பெயரை சம்பாதிக்கும் என்பதே, அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது...' என, நினைவுபடுத்த துாண்டும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை: நிதி நிலைமையை காரணம் காட்டி, மக்கள் நலத் திட்டங்களை கைவிடாமல், மக்களின் நம்பிக்கையை

பேச்சு, பேட்டி, அறிக்கை

'இன்னும் ஒரு சில மாதங்களில், தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானவற்றை தமிழக அரசு நிறைவேற்றாவிடில், மக்களிடம் கெட்ட பெயரை சம்பாதிக்கும் என்பதே, அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது...' என, நினைவுபடுத்த துாண்டும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை: நிதி நிலைமையை காரணம் காட்டி, மக்கள் நலத் திட்டங்களை கைவிடாமல், மக்களின் நம்பிக்கையை இழந்து விடாத வகையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற, தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.


'பணம் இல்லை; கடனில் கஷ்டப்படுகிறேன் என யாராவது சொன்னால், அவரிடம் பிறர் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். எனவே, வெள்ளை அறிக்கை மூலம் அந்த 'ரூட்'டில் தமிழக அரசு போகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது...' என, கூறத் துாண்டும் வகையில், தமிழக பா.ஜ., பொதுச் செயலர் சீனிவாசன் அறிக்கை:
தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் சமர்ப்பித்தது வெள்ளை அறிக்கையா அல்லது வெற்று அறிக்கையா என தெரியவில்லை. ஏனெனில், தி.மு.க.,வை நம்பி ஓட்டளித்த மக்களை ஏமாற்றும் வெற்று அறிக்கை போல அது உள்ளது.


'அ.தி.மு.க., அரசை குறை கூறும் இவர்கள், வேறு வழியின்றி, கடன் தான் வாங்குவர். தமிழக மக்கள் மீது கூடுதல் கடன் சுமை ஏற்றப்படும்...' என, கூறத் துாண்டும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் ராமகிருஷ்ணன் பேட்டி:
மோசமாக உள்ள தமிழகத்தின் நிதி நிலைமையை மேம்படுத்தி, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற, தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்.


'குரலற்றவர்களின் குரலை, தமிழக அரசு எப்போதும் செவி மடுத்ததில்லை. அந்த வகையில், இதுவும் அமைந்து விட்டது...' என, கூறத் துாண்டும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை:
சமூக நீதி என்று அரசியல் செய்து விட்டு, சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள துப்புரவு பணியாளர்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றாமல் அவர்களை ஏமாற்றுவது எந்த விதத்திலும் நியாயமானது இல்லை. சுகாதாரப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.


'என்ன கொரோனா வந்தாலும், அரசியல் தலைவர்கள் மிதப்பில் தானே இருக்கின்றனர். அதுபோல, பா.ஜ.,வுக்கு பணம் வந்திருக்கும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக சிறுபான்மையினர் கமிஷன் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை:
கடந்த 2018- - 2019ல் 2,410 கோடி ரூபாயாக இருந்த பா.ஜ.,வின் வருமானம், 2019- - 2020ல் 50 சதவீதம் உயர்ந்து 3,623 கோடி ரூபாயாக ஆகியுள்ளது. தேசம் முழுதும் கொரோனாவால் முடங்கி கிடந்தபோது பா.ஜ.,வின் கஜானாவில் மட்டும் பணமழை பொழிந்தது எப்படி?

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ellar - New Delhi,இந்தியா
12-ஆக-202111:00:02 IST Report Abuse
ellar அல்போன்ஸ் சார்...அதே காலத்தில் இந்திய "தொண்டு நிறுவனங்கள்" 38000 கோடி திரட்டி இருக்கின்றனவே அது எப்படி???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X