ஹிமாச்சலில் நிலச்சரிவு :60 பேர் கதி என்ன?

Updated : ஆக 13, 2021 | Added : ஆக 11, 2021 | கருத்துகள் (3) | |
Advertisement
சிம்லா : ஹிமாச்சல பிரதேசத்தின், கின்னாவுர் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில், அரசு பேருந்து உட்பட பல்வேறு வாகனங்கள் சிக்கின. இதில், 11 பேர் பலியாகினர்; 13 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும், '50 - 60 பேர் வரை, மண்ணுக்குள் புதையுண்டு இருக்கலாம்' என அஞ்சப்படுகிறது.ஹிமாச்சல பிரதேசத்தில், முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்குள்ள கின்னாவுர்
ஹிமாச்சல்  நிலச்சரிவு ,60 பேர் கதி என்ன?

சிம்லா : ஹிமாச்சல பிரதேசத்தின், கின்னாவுர் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில், அரசு பேருந்து உட்பட பல்வேறு வாகனங்கள் சிக்கின. இதில், 11 பேர் பலியாகினர்; 13 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும், '50 - 60 பேர் வரை, மண்ணுக்குள் புதையுண்டு இருக்கலாம்' என அஞ்சப்படுகிறது.ஹிமாச்சல பிரதேசத்தில், முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

இங்குள்ள கின்னாவுர் மாவட்டத்தின், ரெகாங்க் பியோ - சிம்லா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சவுரா கிராமத்தில், நேற்று மதியம் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது, கின்னாவுரில் இருந்து சிம்லா நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, லாரி மற்றும் ஆறு கார்கள் உட்பட பல்வேறு வாகனங்கள் நிலச்சரிவில் சிக்கின. பேருந்தில் 40 பேர் வரை இருந்ததாக கூறப்படுகிறது. ''நிலச்சரிவில் சிக்கியவர்களில், 13 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 11 பேரின் உடல்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளன. ''நிலச்சரிவில் சிக்கிய கார்கள், சட்லஜ் ஆற்றில் விழுந்திருக்க கூடும்,'' என, மாநில பேரிடர் மேலாண்மை இயக்குனர் சுதேஷ் குமார் மோக்தா தெரிவித்தார்.

ஹிமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்குருடன், பிரதமர் நநேந்திர மோடி தொலைபேசி வாயிலாக உரையாடி, நிலச்சரிவு நிலவரத்தை கேட்டறிந்தார்.'மீட்பு பணி மற்றும் சிகிச்சையில் அனைத்து விதமான உதவிகளையும் மத்திய அரசு அளிக்கும்' என பிரதமர் உறுதி அளித்தார்.மீட்பு பணியில், ஹிமாச்சல பிரதேச அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு, இந்தோ - திபெத் போலீஸ் படைக்கு, உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டார்.

இமாச்சலில் நிலச்சரிவு 11 பேர் பலி

ஹிமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்குர் சட்டசபையில் நேற்று கூறியதாவது:நிலச்சரிவின் இடிபாடுகளுக்குள் அரசு பேருந்து உட்பட மேலும் சில வாகனங்கள் புதைந்துள்ளன. ஓட்டுனரும், நடத்துனரும் காயங்களுடன் மீட்கப்பட்டனர். பேருந்தில் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்ற விபரங்களை சொல்லும் நிலையில் அவர்கள் இல்லை.இடிபாடுகளுக்குள், 50 - 60 பேர் வரை புதையுண்டு இருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. தேசிய பேரிடர் மீட்பு படை, இந்தோ - திபெத் போலீஸ், மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் உள்ளூர் போலீசார் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக ராணுவமும் தெரிவித்துள்ளது. மீட்பு பணிக்கு, ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

முந்தைய நிலச்சரிவுகள்!

*செப்., 18, 1948

அசாமின் கவுகாத்தியில் கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில், 500 பேர் பலி.

*அக்., 4, 1968

மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங்கில் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில், 1,000 பேர் பலி.

*ஆக., 11, 1998

உத்தரகண்ட் நிலச்சரிவில் மாப்லா கிராமம் அடித்துச்செல்லப்பட்டதில், 380 பேர் பலி.

*ஜூலை, 2000

மும்பை நிலச்சரிவில், 67 பேர் பலி.

*நவ., 9, 2001

கேரளாவின் அம்பூரி நிலச்சரிவில் சிக்கி, 40 பேர் பலி.

*ஜூன் 16, 2013

உத்தரகண்டில் வெள்ளம், நிலச் சரிவில், 5,700 பேர் பலி .

*ஜூலை 30, 2014

மஹாராஷ்டிராவின் மாலின் பகுதி நிலச்சரிவில், 151 பேர் பலி.

*ஆக., 7, 2020

கேரளா மூணாறு அருகே ராஜமலை நிலச்சரிவில், 52 பேர் பலி.

*ஜூலை 24, 2021

மஹாராஷ்டிராவின் ராய்காட் மாவட்ட நிலச்சரிவில், 44 பேர் பலி.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
12-ஆக-202119:41:18 IST Report Abuse
M  Ramachandran K.N. Dhasarathan - Chennai,இந்தியா நீங்கள் நதி நீர் இணைப்பு பற்று கேட்டகிறீர்கள் சரி முதலில் இப்போ அமைந்த உங்கள் அரசு எதிர் கட்சியாக கூவும் போது இஙகு எந்த முனேற்றத்தையும் மத்திய அரசு செய்து நல்ல பெயர் எடுக்க கூடாது என்று விவசாயிகலை தூண்டி விட்டு கொண்டும். தாங்கள் பங்க்கு வகித்த போது அரசில் கையொப்ப மிட்ட திட்டங்களையெ ஏதா இப்போர் உலா அரசு கொண்டு வந்த திட்டங்கள் என்று முரண்டு பிடித்து மக்களாய் திசைதிருப்பும் வேலைகளாய் செய்தஹடா அதற்குள் வசதியாக மறந்து விட்டு கருத்தை தெரிவிப்பது மத்திய அரசின் மீது காழ்ப்புணர்ச்சி யை காட்டுவது போனால் தெரிகிறது.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
12-ஆக-202119:35:51 IST Report Abuse
M  Ramachandran ஏன் இந்த இடங்களில் மலையய் குடைந்து சாலை அமைக்க கூடாதா? உயிர் சேதத்தையும் பொருள் சேதத்தையும் தவிர்க்க உதவும் வகையில் சாலையய் அமைப்பது குறித்து அரசு முயற்சிக்கவேண்டும். ஆனால் பெரும்பாலுமிடங்களில் நதியை ஒட்டி உயர்ந்த மலையை யின் ஓரங்களிலேயே நெடுஞ்சாலைகள் செல்கிறது. நான் அந்த பாதையில் சென்ரிரூக்கிரேன்.சிம்லா மணாலி பாதை ஆற்றோரமெ செல்கிறது. பய மாக தான் இருக்கும்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
12-ஆக-202105:15:06 IST Report Abuse
Kasimani Baskaran இறந்தவர்களுக்கு அஞ்சலிகள். காயமுற்றோர் நலமடைய பிரார்த்தனைகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X