தமிழ்நாடு

ரேஷன் கார்டில் புகைப்படம் மாற்ற விண்ணப்பம் குவிகிறது! அரசின் மாத உதவித்தொகை பெறுவதற்கு ஆர்வம்

Added : ஆக 12, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் ரேஷன் கார்டில் குடும்பத் தலைவரின் புகைப்படத்திற்கு பதிலாக குடும்பத் தலைவியின் புகைப்படம் இடம் பெற விண்ணப்பங்கள் குவிந்து வருகிறது.தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததால் பெண்களுக்கு பஸ்சில் இலவச பயணம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என தேர்தலின் போது வாக்குறுதி அளிக்கப்பட்டது.தேர்தலில்
ரேஷன் கார்டில் புகைப்படம் மாற்ற விண்ணப்பம் குவிகிறது! அரசின் மாத உதவித்தொகை பெறுவதற்கு ஆர்வம்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் ரேஷன் கார்டில் குடும்பத் தலைவரின் புகைப்படத்திற்கு பதிலாக குடும்பத் தலைவியின் புகைப்படம் இடம் பெற விண்ணப்பங்கள் குவிந்து வருகிறது.

தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததால் பெண்களுக்கு பஸ்சில் இலவச பயணம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என தேர்தலின் போது வாக்குறுதி அளிக்கப்பட்டது.தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்றதும் நகர பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகிறது.

அதன்படி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என்ற வாக்குறுதி எந்த நேரத்திலும் நிறைவேற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.இதனால் மாவட்டங்கள் தோறும் குடும்பத் தலைவியின் புகைப்படத்துடன் புதிய ரேஷன் கார்டு கேட்டு அரசு மற்றும் தனியார் இ சேவை மையங்களில் அதிகமானோர் விண்ணப்பிக்கின்றனர்.

விழுப்புரம் மாவட்டதில் 1,254 ரேஷன் கடைகள் உள்ளன. இதில், 5 லட்சத்து 93 ஆயிரத்து 363 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். மாவட்டத்தில் குடும்பத் தலைவியின் புகைப்படத்துடன் புதிய ரேஷன் கார்டு கேட்டும், ஏற்கனவே கார்டில் உள்ள குடும்பத் தலைவரின் புகைப்படத்திற்கு பதிலாக குடும்பத் தலைவியின் புகைப்படம் இடம் பெற கேட்டும் விண்ணப்பங்கள் குவிகின்றன.

இதுகுறித்து வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் கூறுகையில், 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.ஆனால், எந்த வகை கார்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என இதுவரை குறிப்பிடவில்லை. அதற்குள் குடும்பத் தலைவரின் புகைப்படத்திற்கு பதிலாக குடும்பத் தலைவியின் புகைப்படம் இடம் பெற கேட்டு விண்ணப்பங்கள் அதிகளவில் வருகிறது' என தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X