தமிழ்நாடு

ஆக்கிரமிப்பு அகற்ற அதிகாரிகள் தாமதம்: வருவாய்த்துறை அறிக்கை இழுத்தடிப்பு:நல்லாறு 'நல்ல' ஆறாக மாறுவது எப்போது?

Updated : ஆக 12, 2021 | Added : ஆக 12, 2021
Share
Advertisement
அவிநாசி---நல்லாறு ஆக்கிரமிப்பு விவகாரத்தில் வருவாய்த்துறை அறிக்கை சமர்ப்பிப்பதில் தாமதம் காரணமாக, ஆக்கிரமிப்பு அகற்றுவதில் தாமதம் நிலவுவதாக பொதுப்பணித்துறையினர் கூறுகின்றனர்.கோவை மாவட்டம், அன்னுாரில் இருந்து, நொய்யல் ஆற்றின் கிளை நதியாக 'நல்லாறு' உருவாகி, அவிநாசி ஒன்றியம், ராமநாதபுரம், கருவலுார், நம்பியாம்பாளையம், செம்பியநல்லுார் ஊராட்சி வழியே சென்று, நொய்யல்
ஆக்கிரமிப்பு அகற்ற அதிகாரிகள் தாமதம்: வருவாய்த்துறை அறிக்கை இழுத்தடிப்பு:நல்லாறு 'நல்ல' ஆறாக மாறுவது எப்போது?

அவிநாசி---நல்லாறு ஆக்கிரமிப்பு விவகாரத்தில் வருவாய்த்துறை அறிக்கை சமர்ப்பிப்பதில் தாமதம் காரணமாக, ஆக்கிரமிப்பு அகற்றுவதில் தாமதம் நிலவுவதாக பொதுப்பணித்துறையினர் கூறுகின்றனர்.

கோவை மாவட்டம், அன்னுாரில் இருந்து, நொய்யல் ஆற்றின் கிளை நதியாக 'நல்லாறு' உருவாகி, அவிநாசி ஒன்றியம், ராமநாதபுரம், கருவலுார், நம்பியாம்பாளையம், செம்பியநல்லுார் ஊராட்சி வழியே சென்று, நொய்யல் ஆற்றில், சங்கமிக்கிறது.ஆற்றின் பல பகுதிகள், ஆக்கிரமிக்கப்பட்டு, கட்டடமாக உருமாறியுள்ளன. கடந்த மூன்றாண்டுக்கு முன் பெய்த பலத்த மழையில், நல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல வீடுகள் வெள்ளத்தில் மிதந்தன; மக்கள் வெகுவாக பாதித்தனர்.

மாநிலத்தின் பல இடங்களில், இதுபோன்ற பிரச்னை ஏற்பட்ட நிலையில், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.அதன்படி, அவிநாசி பேரூராட்சி, சீனிவாசபுரம் பகுதியில், நத்தம் புறம்போக்கு மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்பு என்ற அடிப்படையில், 150 வீடுகள் ஆக்கிரமிப்பில் உள்ளது என்று கணக்கெடுக்கப்பட்டது. அந்த வீடுகளை காலி செய்ய, பொதுப்பணித்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதை எதிர்த்து, குடியிருப்புவாசிகள் சிலர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.

வழக்கை விசாரித்த கோர்ட், நத்தம் புறம்போக்கில் உள்ள வீடுகளை தவிர்த்து, நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ள கட்டுமானங்கள் குறித்து தனியாக 'சர்வே' செய்து, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என, உத்தரவிட்டது. இதனால், 2019, ஜூலை மாதம், பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து, நல்லாற்றின் இருபுறமும் 'சர்வே' செய்து, எல்லையை கண்டறிந்தனர்.அதிகாரிகள் மெத்தனம்இடையில், நீர்வழித்தடத்தை ஆக்கிரமித்து, பல இடங்களில் குடியிருப்புகள் கட்டப்பட்டிருந்தன;அந்த இடங்களை, பொதுப்பணித்துறையினர் வண்ணம் தீட்டி, அடையாளப்படுத்தினர்.

இதற்கிடையில், நல்லாற்றில், 4.60 கோடி ரூபாய் செலவில், தடுப்புச்சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது. ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் இப்பணி நடந்து வருவதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.இது குறித்து, பொதுப்பணித்துறையினர் கூறுகையில், 'நல்லாற்றில் ஆக்கிரமிப்பு தொடர்பான அறிக்கை, வருவாய் துறையினரிடம் வழங்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை அடிப்படையில் தான் ஆக்கிரமிப்பு அகற்ற முடியும்.

ஆனால், வருவாய்த்துறையினர் காலதாமதம் செய்து வருகின்றனர்,' என்றனர்.அவிநாசி தாசில்தார் ராகவியிடம் கேட்டபோது, ''சமீபத்தில் தான் பொறுப்பேற்றேன். நல்லாறு ஆக்கிரமிப்பு விவகாரம் தொடர்பான அறிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X