ரூ.4,600 கோடி 'கிரிப்டோகரன்சி' கொள்ளை! உலகின் மிகப் பெரிய மோசடி

Updated : ஆக 12, 2021 | Added : ஆக 12, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
புதாபெஸ்ட் : கணினி நாசகாரர்கள், 4,600 கோடி ரூபாய் மதிப்பிலான 'கிரிப்டோகரன்சி'யை கொள்ளையடித்தது, உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஐரோப்பாவின், ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த, பாலி நெட்ஒர்க் நிறுவனம், வலைதளங்களில் புழங்கும் 'கிரிப்டோகரன்சி' எனும், மெய்நிகர் நாணய பரிவர்த்தனைக்கான சேவையை வழங்கி வருகிறது.பாலி நெட்ஒர்க் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக,
cryptocurrency, Bitcoin, Hackers

புதாபெஸ்ட் : கணினி நாசகாரர்கள், 4,600 கோடி ரூபாய் மதிப்பிலான 'கிரிப்டோகரன்சி'யை கொள்ளையடித்தது, உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பாவின், ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த, பாலி நெட்ஒர்க் நிறுவனம், வலைதளங்களில் புழங்கும் 'கிரிப்டோகரன்சி' எனும், மெய்நிகர் நாணய பரிவர்த்தனைக்கான சேவையை வழங்கி வருகிறது.பாலி நெட்ஒர்க் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக, 'பிட்காய்ன், பினான்ஸ்செயின், எதிரியம், பாலிகான்' உள்ளிட்ட மெய்நிகர் நாணய சந்தைகள் உள்ளன.

இந்நிலையில் கணினி நாசகாரர்கள், பாலி நெட்ஒர்க் 'சர்வரில்' நுழைந்து, 4,600 கோடி ரூபாய் மதிப்பிலான மெய்நிகர் நாணயங்களை கொள்ளை அடித்துள்ளனர். உலகளவில், மெய்நிகர் நாணய சந்தையில், இந்த அளவிற்கு மதிப்புள்ள மெய்நிகர் நாணயங்கள் கொள்ளை அடிக்கப்பட்டது இதுவே முதன் முறை.


latest tamil news



'பினான்ஸ்செயின், எதிரியம், பாலிகான்' ஆகிய மூன்று மெய்நிகர் நாணய சந்தைகளில், இந்த கொள்ளை நிகழ்ந்துள்ளது. இது குறித்து அறிந்த உடன், 'இந்த மூன்று சந்தைகளில் இருந்து வரும் மெய்நிகர் நாணயங்களை ஏற்க வேண்டாம்' என, பாலி நெட்ஒர்க், வாடிக்கை நிறுவனங்களை கேட்டுக் கொண்டது. அத்துடன், கொள்ளை அடித்த மெய்நிகர் நாணயங்களை திரும்பத் தருமாறும், வேண்டுகோள் விடுத்தது.

இதையடுத்து, கொள்ளையர்கள் சிறிது மனமிரங்கி, 35 கோடி ரூபாய் மதிப்புள்ள மெய்நிகர் நாணயங்களை திரும்பத் தந்துள்ளனர். இதனிடையே, சர்வரில், நாசவேலைக்கு காரணமான குறைபாட்டை கண்டுபிடித்து சரி செய்து விட்டதாக, பாலி நெட்ஒர்க் அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஆக-202118:07:09 IST Report Abuse
kulandai kannan 1.76 லட்சம் கோடி??
Rate this:
Cancel
R Ravikumar - chennai ,இந்தியா
12-ஆக-202113:03:08 IST Report Abuse
R Ravikumar இது பலூன் .. எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்று ஒரு முறை படித்தேன் .ஆனால் இப்படி ஹேக்கிங் செய்வார்கள் என்று எதிர் பார்க்கவில்லை. நமது பேங்க் இணையதளங்கள் எந்த அளவிற்கு பாதுகாப்பு என்று கேள்வி எழுகிறது. ஒரு பேங்க், நகை கடை கொள்ளை என்றால் கொலை செய்யும் அளவிற்கு போகும் அரசாங்கம். இந்த இணைய கொள்ளை காரர்களை எளிதில் நெருங்க முடியாது, நெருங்கினாலும் நீதி மன்றத்தில் நிரூபிக்க முடியாது. இந்த சட்ட சிக்கல் நம்மை எதிர்காலத்தில் மிக பெரிய ஆபத்தில் கொண்டு நிறுத்தும் .
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
12-ஆக-202112:43:06 IST Report Abuse
Natarajan Ramanathan 2G ராசாவை யாராலுமே வெல்ல முடியாது..
Rate this:
Hari - chennai,இந்தியா
12-ஆக-202117:04:28 IST Report Abuse
Hariஅவரு தலைவரு அப்படி ட்ரைநிங் கொடுத்து தன்னுடைய அணைத்து திறமையையும் செயல்படுத்தி இப்போது வாழ்க்கைல நிரந்தரமான செட்டில் ஆகி இருக்கார்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X