அரசியல் செய்தி

தமிழ்நாடு

" வாக்குறுதிகளில் முக்கியமானவற்றை நிறைவேற்றாவிட்டால் கெட்ட பெயரை சம்பாதிக்கும்... "

Updated : ஆக 12, 2021 | Added : ஆக 12, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
நிதி நிலைமையை காரணம் காட்டி, மக்கள் நலத் திட்டங்களை கைவிடாமல், மக்களின் நம்பிக்கையை இழந்து விடாத வகையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற, தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.-விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்'இன்னும் ஒரு சில மாதங்களில், தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானவற்றை தமிழக அரசு நிறைவேற்றாவிடில், மக்களிடம் கெட்ட பெயரை
விடுதலை சிறுத்தைகள், தலைவர், திருமாவளவன்,
தமிழக பா.ஜ., பொதுச் செயலர், சீனிவாசன்,
 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பொலிட்பீரோ உறுப்பினர்,  ராமகிருஷ்ணன்
, நாம் தமிழர், தலைமை ஒருங்கிணைப்பாளர், சீமான், தமிழக சிறுபான்மையினர் கமிஷன்,  பீட்டர் அல்போன்ஸ்

நிதி நிலைமையை காரணம் காட்டி, மக்கள் நலத் திட்டங்களை கைவிடாமல், மக்களின் நம்பிக்கையை இழந்து விடாத வகையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற, தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.-விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்


'இன்னும் ஒரு சில மாதங்களில், தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானவற்றை தமிழக அரசு நிறைவேற்றாவிடில், மக்களிடம் கெட்ட பெயரை சம்பாதிக்கும் என்பதே, அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது...' என, நினைவுபடுத்த துாண்டும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை


தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் சமர்ப்பித்தது வெள்ளை அறிக்கையா அல்லது வெற்று அறிக்கையா என தெரியவில்லை. ஏனெனில், தி.மு.க.,வை நம்பி ஓட்டளித்த மக்களை ஏமாற்றும் வெற்று அறிக்கை போல அது உள்ளது.
-தமிழக பா.ஜ., பொதுச் செயலர் சீனிவாசன்


'பணம் இல்லை; கடனில் கஷ்டப்படுகிறேன் என யாராவது சொன்னால், அவரிடம் பிறர் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். எனவே, வெள்ளை அறிக்கை மூலம் அந்த 'ரூட்'டில் தமிழக அரசு போகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது...' என, கூறத் துாண்டும் வகையில், தமிழக பா.ஜ., பொதுச் செயலர் சீனிவாசன் அறிக்கை


மோசமாக உள்ள தமிழகத்தின் நிதி நிலைமையை மேம்படுத்தி, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற, தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்.- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் ராமகிருஷ்ணன்


'அ.தி.மு.க., அரசை குறை கூறும் இவர்கள், வேறு வழியின்றி, கடன் தான் வாங்குவர். தமிழக மக்கள் மீது கூடுதல் கடன் சுமை ஏற்றப்படும்...' என, கூறத் துாண்டும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் ராமகிருஷ்ணன் பேட்டி


சமூக நீதி என்று அரசியல் செய்து விட்டு, சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள துப்புரவு பணியாளர்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றாமல் அவர்களை ஏமாற்றுவது எந்த விதத்திலும் நியாயமானது இல்லை. சுகாதாரப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.-நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்


latest tamil news




'குரலற்றவர்களின் குரலை, தமிழக அரசு எப்போதும் செவி மடுத்ததில்லை. அந்த வகையில், இதுவும் அமைந்து விட்டது...' என, கூறத் துாண்டும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை


கடந்த 2018- - 2019ல் 2,410 கோடி ரூபாயாக இருந்த பா.ஜ.,வின் வருமானம், 2019- - 2020ல் 50 சதவீதம் உயர்ந்து 3,623 கோடி ரூபாயாக ஆகியுள்ளது. தேசம் முழுதும் கொரோனாவால் முடங்கி கிடந்தபோது பா.ஜ.,வின் கஜானாவில் மட்டும் பணமழை பொழிந்தது எப்படி?-தமிழக சிறுபான்மையினர் கமிஷன் தலைவர் பீட்டர் அல்போன்ஸ்


'என்ன கொரோனா வந்தாலும், அரசியல் தலைவர்கள் மிதப்பில் தானே இருக்கின்றனர். அதுபோல, பா.ஜ.,வுக்கு பணம் வந்திருக்கும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக சிறுபான்மையினர் கமிஷன் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
15-ஆக-202103:40:34 IST Report Abuse
meenakshisundaram திருமா நீங்க எது முக்கியம்னு ஒரு லிஸ்ட் கொடுத்திட்டேங்கன்னா 'வசதியா இருக்கும் துண்டு சீட்டு கூட போதும் .உடனே உங்களுக்கும் தமிழனுக்கும் விடியல்'தான் .
Rate this:
Cancel
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
12-ஆக-202122:35:46 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் கமாண்டர் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்று சத்தியம் செய்த டீம்கா அல்லக்கைஸ் நிலைமை பரிதாபம் மக்கள் இனிக்காரித் துப்புவாங்க
Rate this:
Cancel
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
12-ஆக-202122:03:35 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் கூட்டணியில் இருந்து கழற்றி விடப்படுவோம் என்பது குருமாவுக்கு புரிந்து விட்டது டீம்காவிலும் விசிக உளவுப்பிரிவினர் இருக்கிறார்கள் அடுத்து வைகோவும் பிச்சிக்கிட்டு "மோடியின் கரங்களை வலுப்படுத்துவோம்" என்று கர்ஜிப்பார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X