அவரது பேட்டி: தமிழக அரசின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் வெளியிட்டுள்ளார். ஒரு இடத்தில் கூறியதை, பல இடங்களில் மாற்றி மாற்றி கூறியுள்ளனர்.கடந்த, 2006 - 07 பட்ஜெட்டில் இருந்து, 2020 - 21ம் ஆண்டு வரையிலான பட்ஜெட்டில் என்ன இருந்ததோ, அதில் இருந்த எண்களை எடுத்து, சிறிய புத்தகமாக போட்டுள்ளனர்; புதிதாக ஒரு ஆய்வும் செய்யவில்லை. மத்திய அரசின் பங்கு கடந்த, 10 ஆண்டுகளில், நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், தி.மு.க., ஆட்சி செய்த, ஐந்து ஆண்டுகளில் ஒரு மடங்கு கூட ஏறவில்லை. அப்படி இருந்தும், தற்போது மத்திய அரசு ஏமாற்றுவதாகக் கூறுகின்றனர்.

மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது; பால் விலையை ஏற்றக்கூடாது என, எதிர்க்கட்சியாக இருக்கும்போது கூறிவிட்டு, தற்போது உயர்த்தாதது தப்பு என்கின்றனர். வரும் ஐந்தாண்டுகளில், குடிநீர் கட்டணம் உயரும்; சொத்து வரி ஏறும்; மின் கட்டணம் அதிகரிக்கும். தமிழக அரசுக்கு, 5.70 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது உண்மை. இதற்கு குறைந்தபட்சம் வட்டியாக, 45 ஆயிரம் கோடி ரூபாய் கட்ட வேண்டும். தமிழக பட்ஜெட்டில், 18 முதல் 20 சதவீதம் வரும்.இந்நிலையில், தேவையில்லாமல் மானியம், இலவசம் வழங்குவதை நிறுத்த வேண்டும். உற்பத்திக்கும், வளர்ச்சிக்கும் ஆதரவு அளித்தால், ஐந்து ஆண்டுகள் மக்களுக்கு விடியல் காலமாக இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE